More
Categories: Cinema News latest news

தளபதி66 பட இயக்குனரை பாடாய்படுத்திய சிவகுமார் குடும்பம்.! இன்னும் வேற யாரு இருக்காங்க.?!

பழம்பெரும் நடிகர் சிவகுமார் குடும்பம் தற்போது வரை கூட்டுக்குடும்பமாக இருந்து வந்து பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறது. அவருக்கு கார்த்தி, சூர்யா என்று இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவருமே திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வளர்ந்துள்ளனர் என்பது நாம் அறிந்ததே.

இதில் சூர்யா அல்லது கார்த்தி யாருக்கு கதைகூற ஒருவர் சென்றாலும் சிவக்குமார் உட்பட அனைவருமே அந்த கதையை கேட்டு விடுகின்றனராம். அப்படித்தான் சூர்யாவுக்கு வந்த பல கதைகள் கார்த்தி வசம் சென்று சூப்பர் ஹிட் அடித்துள்ளன. அதற்கு பருத்தி வீரன், பையா, மெட்ராஸ், தீரன் உட்பட என பல ஹிட் படங்களை கூறலாம்.

Advertising
Advertising

கார்த்தி அல்லது சூர்யாவுக்கு ஒரு இயக்குனர் கதை கூற சென்றால் எப்படியும் குறைந்தது 5 பேரிடம் ஆவது அந்த கதையை கூறி ஓகே செய்ய வேண்டுமாம். அப்படி அதில் சிக்கிய பல இயக்குநர்கள் உண்டு. அந்த வரிசையில் தளபதி66 திரைப்படத்தை இயக்க உள்ள வம்சியும் இருந்துள்ளார்.

இதையும் படியுங்களேன் – அவர் Use பண்ணிட்டு தான் என்கிட்ட கொடுப்பார்.! அஜித்திற்கு இப்படி ஒரு பழக்கமா.?!

இயக்குனர் வம்சி தெலுங்கில் நல்ல இயக்குனர். அவர் தெலுங்கு, தமிழ் என இரு மொழித் திரைப்படமாக தோழா எனும் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தில் கார்த்தி மற்றும் நாகர்ஜுனா இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

இதற்காக கதை கூற சென்ற வம்சி கார்த்தி மற்றும் அவரது குடும்பத்தார் என சேர்த்து மொத்தம் 7 தடவை அந்த கதையை கூறியுள்ளாராம். அதன்பிறகு ஓகே செய்து பின்னர்தான் அது படமாக்கப்பட்டதாம்.

ஆனால், தளபதி விஜய் ஒரே ஒரு தடவை கதையை கேட்டு வம்சியை ஓகே செய்து விட்டார். வம்சிக்கு பெரிய பட வாய்ப்பு இரண்டரை மணிநேரத்தில் உடனடியாக கிடைத்துவிட்டது.

Published by
Manikandan

Recent Posts