பாலச்சந்தரை பார்த்து அஜித் பட இயக்குனர் கேட்ட கேள்வி!.. இது கூட தெரியாம எப்படி?...

Balachander
இயக்குனர் சிகரம் என்று புகழப்பட்ட பாலச்சந்தர் தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குனராக திகழ்ந்தவர். பெண் விடுதலை, பெண் சுதந்திரம் போன்றவற்றை முதன்மையாக வைத்து கதையம்சம் அமைப்பதில் ஈடுபாடோடு திகழ்ந்தவர் பாலச்சந்தர். அந்த சமயத்தில் அவர் ஒரு புரட்சி இயக்குனராகவே வலம் வந்தார்.
கமல்ஹாசன், ரஜினிகாந்த், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல கலைஞர்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர். இந்த நிலையில் பாலச்சந்தரிடம் பேட்டி காண ஒரு பத்திரிக்கையாளர் சென்றிருக்கிறார். அவர் பின்னாளில் பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக சேர்ந்து மிகப் பெரிய இயக்குனராக இப்போது இருக்கிறார். அவர் பத்திரிக்கையாளராக இருந்தபோது பாலச்சந்தரை பேட்டிக்காண சென்ற சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.

Balachander
இயக்குனரான பத்திரிக்கையாளர்
எழுத்தாளர் சாவி என்பவர் திசைகள் என்ற பத்திரிக்கையை சொந்தமாக வைத்திருந்தார். அந்த பத்திரிக்கையில் புகைப்பட கலைஞராக இருந்தவர் பாலச்சந்தரின் மகன் கைலாஷ். இந்த நிலையில்தான் அப்பத்திரிக்கையில் நிருபராக பணியாற்றிய ஒருவருக்கு பாலச்சந்தரிடம் பேட்டி காண வாய்ப்பு கிடைத்தது.
அதன்படி ஒரு நாள் பாலச்சந்தரின் வீட்டிற்கு போனார் அந்த நிருபர். அப்போது அந்த வீட்டில் இருந்த நபர் ஒருவரிடம் “பாலச்சந்தர் சார் எங்கே?” என கேட்க, அதற்கு அவர் “மேலே அவரது அறையில் இருக்கிறார்” என கூறியிருக்கிறார். அதனை தொடர்ந்து அந்த நிருபர் மேலே அவரது அறைக்கு செல்ல அங்கே ஒருவர் அங்கிருந்த விருதுகளை துடைத்துக்கொண்டிருந்தாராம்.
அவருக்கு பின்னால் அந்த நிருபர் நிற்க, “பாலச்சந்தரை நான் பேட்டி எடுக்க வந்திருக்கிறேன். அவர் எப்போது வருவார்?” என கேட்க, அதற்கு அவர் அந்த நிருபரை திரும்பி பார்த்து, “நான்தான் பாலச்சந்தர்” என கூறியிருக்கிறார். அவரை பார்த்ததும் அந்த நிருபர் ஷாக் ஆகிவிட்டார். அதன் பின் அவரிடம் பேட்டி எடுத்து விடைபெற்றார்.

Vasanth
பின்னாளில் அந்த நிருபர், பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக சேர்ந்து பணியாற்றினார். அதன் பின் “கேளடி கண்மணி”, “ஆசை”, “ரிதம்” போன்ற பல திரைப்படங்களை இயக்கினார். அவரது பெயர்தான் வஸந்த்.
இதையும் படிங்க: மெய்யப்ப செட்டியாரை ஏமாற்றிய ஏவிஎம் குமரன்! ‘களத்தூர் கண்ணம்மா’வில் நடந்த ஆள்மாறாட்டம்