Connect with us

Cinema News

புயலிலும் படப்பிடிப்பை நிறுத்தாத வஸந்த்.. இந்த பாடலை இப்படித்தான் எடுத்தாங்களா??… வேற லெவல்…

கடந்த 2000 ஆம் ஆண்டு அர்ஜூன், ஜோதிகா, மீனா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் “ரிதம்”. இத்திரைப்படத்தை வஸந்த் இயக்கியிருந்தார். ஏ ஆர் ரஹ்மான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

மனதுக்கு மிகவும் நெருக்கமான கதைக்களத்துடன் மிகவும் நேர்த்தியாக எடுக்கப்பட்ட இத்திரைப்படம் இப்போதும் பலரின் Feel Good திரைப்படமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக இத்திரைப்படத்தின் பாடல்கள் மனதை வருடும் பாடல்கள். இத்திரைப்படத்தின் பாடல்களில் ஒரு சிறப்பம்சம் உண்டு.

அதாவது நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு போன்ற ஐம்பூதங்களை அடிப்படையாக கொண்டு தான் இப்பாடல்கள் அமைந்திருக்கும். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு பூதத்தை குறிப்பது போன்று எழுதப்பட்டிருக்கும்.

குறிப்பாக நீரை குறிக்கும் வகையில் இடம்பெற்ற “நதியே நதியே” பாடலை நாம் மறந்திருக்கமுடியாது. அவ்வளவு ரம்மியமான இசையுடன் அப்பாடல் அமைந்திருக்கும். மேலும் அப்பாடல் காட்சிகளை அருவியில் மிகவும் அழகாக படமாக்கியிருப்பார்கள். பார்க்கவே மனதிற்கு குளிர்ச்சியாக இருக்கும். இந்த நிலையில் “நதியே நதியே” பாடலை படமாக்கியது குறித்த ஒரு தகவலை சில ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் வஸந்த் ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார்.

இப்பாடல் காட்சிகள் கேரளாவின் சாலக்குடி பகுதியில் உள்ள அருவியில்தான் படமாக்கினர். அப்போது ஒரு நாள் காலையில் உதவி இயக்குனர்கள் ஓடி வந்து வஸந்திடம் “வெளியே புயல் அடிக்கிறது. இன்று படப்பிடிப்பை நடத்தமுடியாது” என்று கூறியிருக்கிறார்கள். அதற்கு வஸந்த, “சாலக்குடி அருவியில் ஒரு புயலை உண்டாக்க வேண்டும் என்றால் நாம் எவ்வளவு பணம் செலவழிக்க வேண்டும். ஏதோ இயற்கையே நமக்கு அந்த வசதியை தந்திருக்கிறது. அதை நாம் படமாக்க முயற்சி செய்யாமல், படப்பிடிப்பு நடத்த முடியாது என கூறுகிறீர்களே” என அவர்களிடம் வாதிட்டிருக்கிறார்.

மேலும் வஸந்த் “இந்த புயலிலே படமாக்க முடியாது என்று முடிவெடுப்பதை விட, இந்த புயலில் எப்படி படமாக்கலாம் என்பதை குறித்து யோசியுங்கள்” என கூறியிருக்கிறார்.

அதன் பின் வஸ்ந்த் கேமரா யூனிட்டிடம் வந்து “இந்த புயலில் படமாக்குவதற்கான எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளையும் நான் செய்கிறேன். கேமராவிற்கு எது நடந்தாலும் நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன்” எனவும் கூறியிருக்கிறார். அதன் பின்புதான் அவர்கள் கேமராவை தர அனுமதித்து இருந்திருக்கிறார்கள். மேலும் அந்த பாடல் மிகவும் சிறப்பாக படமாக்கப்பட்டது.

google news
Continue Reading

More in Cinema News

To Top