பி.வாசுவுக்கு ஜோசியத்தில் அவ்வளவு நம்பிக்கையா?! - சந்திரமுகி படத்தில் கூட எல்லாமே அப்படித்தான்!

பொதுவாக பலருக்கும் ஜோசியம் பார்க்கும் பழக்கம் என்பது இருக்கிறது. எதிர்காலத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வமும், நிகழ்காலத்தில் தான் சந்திக்கும் பிரச்சனைக்கு ஜோசியர் ஏதேனும் தீர்வு சொல்வார் என்பதாலும் பலரும் இதை தொடர்ந்து செய்து வருகின்றனர். ஜோசியத்தில் சொல்வது போல் எல்லோருக்கும் எல்லாமும் நடப்பதில்லை. ஆனாலும், பல வருடங்களாக இதை பலரும் செய்து வருகின்றனர்.

vasu

vasu

திரையுலகில் ஜோசியம் பார்க்கும் பழக்கம் என்பது எப்போதும் அதிகம். நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலருக்கும் இந்த பழக்கம் உண்டு. பல தயாரிப்பாளர்கள் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் கதையை விட முதலில் அவர்களின் ஜாதகத்தைத்தான் வாங்குவார்கள். ஜோசியர் தயாரிப்பாளர் ஜாதகத்துடன், இயக்குனரின் ஜாதகத்தை ஒப்பிட்டு கருத்து சொன்ன பின்னரே தயாரிப்பாளர் ஒரு முடிவை எடுப்பார். ஏனெனில் சினிமா என்பது பல கோடிகளை விழுங்கும் துறை. நஷ்டம் ஏற்பட்டால் எந்திரிக்க முடியாது என்பதால் பலரும் இதை செய்து வருகின்றனர்.

தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் பி.வாசு. 1981ம் வருடம் முதல் இப்போது வரை தொடர்ந்து திரைப்படங்களை இயக்கி வருகிறார். தமிழ் மட்டுமின்றி கன்னட படங்களையும் வாசு இயக்கி வருகிறார். ரஜினி, பிரபு, சத்தியராஜ் ஆகியோரை வைத்து சூப்பர் ஹிட் படங்களை பி.வாசு இயக்கியுள்ளார்.

vasu

இவர் உதவி இயக்குனராக பணிபுரிந்த போது ‘எதிர்காலத்தில் நீ பெரிய இயக்குனராக வருவாய்’ என ஒரு ஜோசியர் சொன்னாராம். அது அப்படியே நடந்துவிட்டதால் ஜோசியத்தின் மீது வாசுவுக்கு அதிக நம்பிக்கை வந்ததாம். எனவே, அவர் இயக்கும் படங்களில் ஜோசியம் சம்பந்தப்பட்ட காட்சிகளை வைப்பது அவரின் பழக்கம்.

சின்னத்தம்பி படத்தில் குஷ்பு பிறக்கும்போது அவரின் அண்ணன்களிடம் ஒரு ஜோசியர் ‘உங்கள் தங்கச்சி அவரின் விருப்பப்படியே திருமணம் செய்வார்’ என சொல்லுவார். அதுதான் நடக்கும். ரிக்‌ஷா மாமா படத்தில் கூட கவுண்டமணியிடம் ஒரு ஜோசியர் ‘உன்னை தேடி வருவார் ஒரு பிச்சைக்காரி’ என சொல்வார். அதுவே நடக்கும். இப்படி பி.வாசு இயக்கத்தில் பல படங்களில் இதுபோன்ற காட்சிகளை பார்க்கலாம்.

vasu

பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்து பெரிய ஹிட் அடித்த சந்திரமுகி படம் உருவானபோது ‘இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களுக்கு கடவுள் முருகனின் பெயரை வை’ என ஒரு ஜோசியர் சொன்னாராம். அதன்படியே ரஜினிக்கு சரவணன் எனவும், பிரபுவுக்கு செந்தில் நாதன் எனவும், நாசருக்கு கந்தசாமி எனவும், வடிவேலுவுக்கு முருகேசன் எனவும் பெயர் வைத்திருப்பார் பி.வாசு.

 

Related Articles

Next Story