Connect with us

இப்ப ரேப் சீன்!..நான் பண்ணட்டுமா!..இளம்பெண்ணை வற்புறுத்தும் இயக்குனர்…அதிர்ச்சி ஆடியோ….

director

Cinema News

இப்ப ரேப் சீன்!..நான் பண்ணட்டுமா!..இளம்பெண்ணை வற்புறுத்தும் இயக்குனர்…அதிர்ச்சி ஆடியோ….

சினிமாவை பொறுத்தவரைக்கும் பெரும்பாலும் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள் தான். எல்லாவற்றிற்கும் தயாராக இருக்கவேண்டும் என்பதே அவர்களுக்கு போடப்படும் முதல் கண்டீசன் ஆகும். இதுவே சில பெண்களின் வாழ்க்கைக்கு கேள்விக்குறியாகவும் இருந்து விடுகின்றன.

தொடர் பாலியல் தொல்லையால் சினிமாவில் நிறைய பேர் பாதிக்கப்படுகின்றனர். என்னதான் சட்டம் வந்தாலும் இந்த மாதிரி பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. இந்த வகையில் சமீபத்தில் வேல் சத்திரியன் என்ற இயக்குனர் தான் ஒரு குறும்படம் எடுக்கப்போவதாகவும் அதற்கு சில துணை நடிகைகள் வேண்டும் என கூறியும் விளம்பரம் படுத்த

vel1_cine

அதை நம்பி ஏராளமான பெண்கள் அவரை போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அவர்களில் சில பேரிடம் வேல்சத்திரியன் தன் வரம்பை மீறி ஆபாச வார்த்தைகளை கூறி சிக்க வைக்க முயற்சி செய்யும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்கள் : நயன்தாராவை ஃபாலோ செய்தால் வாரிசு படம் தப்பிக்கும்.. தளபதி விஜய்க்கு ஓர் சூப்பர் ஐடியா இதோ…

இதோ அந்த உரையாடல் :

இயக்குனர்: உங்க அப்பா எதும் சொன்னாரா?, நீ போனதுக்கு அப்புறம் எனக்கு போன் பண்ணி என்ன ஏதுன்னு துருவி, துருவி கேட்டாரு.

அந்த பெண்: போயிட்டு ஒழுங்கா பத்திரமா வான்னு சொன்னாரு.

இயக்குனர்: சரி, நீ ரெடியா? எந்த சீன் கொடுத்தாலும் நடிப்பியா, ரொமான்ஸ், கிஸ்சு, லிப் டு லிப்பு… அதெப்படி கரெக்டா பண்ணுவ, ரேப் சீன்ல நடிப்பியா.

அந்த பெண்: ரேப் சீனில் நடிக்க மாட்டேன்.

இயக்குனர்: இப்பதான் எல்லாத்துக்கும் ம்ம்னு சொன்ன இது மட்டும் மாட்டேனு சொல்ற… நான் பண்ணட்டுமா ?

சேலம் மாவட்டத்தை சேர்ந்த வீரப்பன்பாளையத்தை சேர்ந்தவர் தான் வேல்சத்திரியன். இவர் நடிக்க வரும் பெண்களின் தாயாருக்கும் போன் செய்து தங்கள் மகளை இப்படி எல்லாம் பண்ணுவேன். பயப்படவேண்டாம் என்று சொல்லுங்கள். எல்லாம் நடக்கும். எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ள வேண்டுமே தவிர பிரச்சினை பண்ணக்கூடாது எனவும் கூற சொல்லியிருக்கிறார்.

இதையும் படிங்கள் : எனக்கு அந்த விருதே வேண்டாம்.. கடுப்பில் சூர்யா.! பெரிய சிக்கலில் தேசிய விருது குழு.!

இதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் புகார் செய்ய அவரை விசாரணைக்கு உட்படுத்தியிருக்கின்றனர். மேலும் இவருடன் துணை இயக்குனராக ஜெயஜோதி என்ற பெண்ணும் சிக்கியுள்ளார். இவரை தன் மனைவி என்று சொல்லி அதே ஊரில் வாடகை எடுத்து ஒரு வீட்டில் குடியிருந்ததாகவும் தெரிகிறது. இன்னும் எத்தனை பெண்களை நாசமாக்கியுள்ளார்கள் என விசாரணையில் தெரியவரும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top