அந்த ஹீரோவ எல்லாம் வச்சு படம் எடுக்காதீங்கனு சொன்னாங்க... பிரபல இயக்குனர் ஓப்பன் டாக்....!

by ராம் சுதன் |
arun vijay-venkadesh
X

அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படம் மூலம் ஆக்சன் ஹீரோவாக கலக்கி வரும் நடிகர் அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து படம் எடுக்க வேண்டாம் என தன்னிடம் பலர் கூறியதாக பிரபல இயக்குனர் ஒருவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

அந்த இயக்குனர் வேறு யாருமல்ல பகவதி படம் மூலம் தளபதி விஜய்யை அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக மாற்றிய இயக்குனர் வெங்கடேஷ் தான். பல படங்களை இயக்கியும் நடித்தும் உள்ள வெங்கடேஷ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்றிருந்தார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது, "அர்ஜுன் நடிப்பில் வெளியான வாத்தியார் படத்தை நான் இயக்கி கொண்டிருந்த சமயத்தில் அர்ஜுன் இயக்கத்தில் அருண் விஜய் தவம் என்ற படத்தில் நடித்து வந்தார். எனவே அடிக்கடி அவர் அர்ஜூனை பார்க்க அலுவலகத்திற்கு வருவார்.

arun vijay

அப்போது அருண் விஜயை பார்த்த நான் இவர் பார்க்க நன்றாக இருக்கிறாரே நம் அடுத்த படத்தை ஏன் இவரை வைத்து இயக்க கூடாது என நினைத்தேன். ஆனால் அதை கேட்டு என்னை சுற்றி இருந்த பலரும் அருண் விஜய்யை ஹீரோவாக போட வேண்டாம் என கூறினார்கள்.

அந்த சமயத்தில் அருண் விஜய் தொடர்ந்து தோல்வி படங்களில் நடித்து வந்ததால், அவரை வைத்து படம் எடுக்க வேண்டாம் என கூறினார்கள். இருப்பினும் நான் அருண் விஜயை வைத்து மலை மலை மற்றும் மாஞ்சா வேலு ஆகிய இரண்டு படங்கள் ஹிட் கொடுத்தேன்" என கூறியுள்ளார்.

Next Story