அந்த படத்தின் காப்பி தான் ’மாநாடு’...! வெட்கமே இல்லாமல் மேடையில் உளறிய வெங்கட் பிரபு..!
நடிகர் சிம்புவுக்கு நீண்ட நாள்களுக்கு பிறகு கம் பேக் கொடுத்த படமாக மாநாடு படம் விளங்கியது. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கினார். மேலும் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார்.
படத்தில் வில்லனாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடித்து அசத்தியிருந்தார். படம் வெளியாகி 100 நாள்களை கடந்தும் வெற்றி வாகை சூடியது. சிம்புவின் கெரியரில் ரிஎன்ரி படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என வெங்கட் பிரபு கூறினார்.
இந்த நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாக காத்துக்கொண்டிருக்கும் படம் ‘ நட்சத்திரம் நகர்கிறது’. இந்த படத்தின் ஆடியோ லாஞ்ச் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.இந்த விழாவிற்கு வெங்கட் பிரபு, வெற்றிமாறன் உட்பட பல இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய வெங்கட் பிரபு மாநாடு படத்தின் கடைசி காட்சி சார்பட்டா பரம்பரை படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் இருந்து காப்பி அடித்தது தான் பகிரங்கமாக கூறினார்.அதாவது ஷார்டுக்கு ஷார்ட் மாறி வரும் சீன்களை உங்க படத்தில் இருந்து தான் எடுத்தேன் என பா.ரஞ்சித் முன்னாடியே வெங்கட் பிரபு கூறினார்.