விஜயுடன் தொடர்ந்து மூணு படம்.. அஜித் வாய்ப்பு கிடைச்சும் மிஸ் பண்ண இயக்குனர்

vjiay_ajith
Ajith: தமிழ் சினிமாவில் இரு பெரும் துருவங்களாக இருப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். இன்று இருவருமே அவரவர் விருப்பப்படி விஜய் ஒரு பக்கம் அரசியலிலும் அஜித் ஒரு பக்கம் அவருடைய கார் ரேசிலும் முழுவதுமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அஜித்தை இயக்கும் வாய்ப்பு வந்தும் அதை மிஸ் செய்து விட்டேன். என ஒரு இயக்குனர் புலம்பிய ஒரு பேட்டி தான் இப்போது வைரலாகி வருகின்றது.
அஜித்தின் நடிப்பில் கடைசியில் வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. அந்த படம் வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றியை அடைந்து இருக்கிறது. அதன் பிறகு கார் ரேஸில் முழுவதுமாக ஈடுபட்டு வருகிறார் அஜித். வரும் அக்டோபர் மாதம் வரை கார் ரேசில் கவனம் செலுத்த இருக்கிறார். அதன் பிறகு தான் அவருடைய அடுத்த பட அறிவிப்பு வெளியாகும். இந்த நிலையில் விஜய் வைத்து செல்வா, பகவதி ,நிலவே வா போன்ற படங்களை இயக்கியவர் வெங்கடேஷ்.
அவர்தான் இப்போது அஜித் படத்தை மிஸ் பண்ணி விட்டேன் என புலம்பி இருக்கிறார். அதாவது அவருடைய இயக்கத்தில் வெளியான திரைப்படம் பூப்பறிக்க வருகிறோம். அந்த படத்தில் சிவாஜி, விக்ரம் கிருஷ்ணா ஆகியோர் நடித்திருப்பார்கள். இந்த படத்தில் தான் முதலில் அஜித் நடிப்பதாக இருந்திருக்கிறது. ஆனால் இந்த படத்தின் கதையை சிவாஜியிடம் சொல்லிவிட்டு திரும்பும் பொழுது அவர் அருகில் இருந்த இயக்குனர் சிவி ராஜேந்திரன் இந்த படத்தை நானே தயாரிக்கிறேன்.
அஜித்தின் கால்ஷீட்டை வாங்கி கொடுக்கிறேன். அஜித்தும் சிவாஜியும் இணைந்தால் படம் நன்றாக இருக்கும் என கூறினாராம். ஆனால் வெங்கடேஷ் ஏற்கனவே தயாரிப்பாளர் ஜி கே ரெட்டி இந்த படத்தை புரொடியூஸ் செய்ய இருக்கிறார். ஆனால் அவருடைய மகன் இந்த படத்தில் நடித்தால் தான் படத்தை தயாரிப்பேன் என சொன்னதினால் இந்த படத்தில் அவருடைய மகன் விக்ரமின் கிருஷ்ணா நடிப்பதாக இருக்கிறது என கூறினாராம்.

இல்லை எனில் சிவாஜியும் அஜித்தும் தான் இந்த படத்தில் நடிப்பதாக இருந்திருக்கும். அந்த ஒரு நல்ல வாய்ப்பை நான் மிஸ் பண்ணிவிட்டேன் என வெங்கடேஷ் அந்த பேட்டியில் புலம்பி இருக்கிறார். ஏற்கனவே சிவாஜி விஜய் காம்போவில் ஒன்ஸ்மோர் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது .அந்த வகையில் சிவாஜியும் அஜித்தும் சேர்ந்திருந்தால் இன்னும் வேற லெவலில் இருந்திருக்கும்.