சிவகார்த்திகேயனின் வெற்றியை முன்னரே கணித்த நடிகர்... வெற்றிமாறன் சொன்ன சூப்பர் சேதி...!
திருச்சிற்றம்பலம் ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் தனுஷ் உடனான நட்பு குறித்து இவ்வாறு பேசினார்.
தனுஷ் சார நான் பார்க்கும்போதே அவர் ஸ்டார் தான். அப்பவுமே காதல் கொண்டேன் அந்த டைம்ல தான் மீட் பண்ணினேன் அவரை. அப்பவே வந்து அவரு ரெண்டு படம் பண்ணிட்டாரு. அப்புறம் திருடா திருடி வந்து மிகப்பெரிய ஹிட்டாகி ஒரு ஸ்டாரா வந்து அது ஒரு கனாக்காலம் படத்துக்கு வந்தாரு. தன்னைத்தானே அவரு செதுக்கிக்கிட்டே தான் இருந்தார்.
தமிழ்ல இருந்து இந்தில நடிச்சி அங்க சக்ஸஸ்புல் ஹீரோவாகி அங்கிருந்து ஹாலிவுட்டுக்குப் போயி நடிச்சிருக்காரு. இன்னும் பெரிய பெரிய விஷயங்கள் நடக்கறதுக்கான கதவுகள் திறந்துருக்குன்னு நான் கேள்விப்பட்டேன். அதெல்லாம் இன்னும் நிறைய வரும்னு நினைக்கிறேன்.
நான் ஒரு அசிஸ்டண்ட் டைரக்டரா இருக்கும்போது கொஞ்சம் முரட்டுத்தனமா அவருக்கிட்ட நடந்துகிட்டேன். அவரு விட்டுட்டாரு. ஒண்ணுமே ரியாக்ட் பண்ணல. அடுத்த ஷெடுல்ல ஒரு 6 மாசம் கழிச்சி அவருக்கு என் மேல இருக்குற நம்பிக்கையைப் பாருங்க.
தனுஷ் எங்கிட்ட ஒரு கதை இருக்கு நான் உங்கக்கிட்ட சொல்றேன்னேன். நார்மலா மத்தவங்களா இருந்தா போன தடவை நம்மகிட்ட அவ்ளோ ரூடா பிஹேவ் பண்ணுனார்லா இவருக்கிட்ட நான் கதை கேட்க மாட்டேன்னு சொல்லுவாங்க. ஆனா அவரு அதெல்லாம் சொல்லல. சார் வாங்க சார் நான் கேட்குறேன்...சார்...இன்னிக்கு நைட்டே கேக்குறேன்னாரு.
கதையைக் கேட்டவுடனே அவர் சொன்னாரு. சார் நான் நார்மலா அண்ணன்கிட்ட கேட்டுத்தான் சார் முடிவு எடுப்பேன். இந்தக்கதை அவருக்கிட்ட கேட்காமலே எனக்கு ஓகே சொல்லணும்னு தோணுது சார்னு சொன்னாரு. அன்னைலருந்து 4 வருஷம் கழிச்சித்தான் நாங்க படம் பண்ணினோம்.
தனுஷ_க்கு முன்கூட்டியே ஒருவரது திறமையைக் கணிக்கக்கூடிய ஆற்றல் உண்டு. அப்படித்தான் அனிருத் 9 படிக்கும்போதே அவர் தாளம் போடுவதைப் பார்த்து இவன் பெரிய மியூசிக் டைரக்டரா வருவான்னு சொன்னார். ஒரு தடவை என்கிட்ட கேட்டாரு. சார் உங்க அசிஸ்டண்ட் யாரும் இருந்தா காமெடியா ஒரு கதை ரெடி பண்ண சொல்லுங்க சார்னு சொன்னாரு.
காமெடிலாம் பண்ணுவீங்களான்னு கேட்டேன். எனக்கு இல்ல சார். சிவகார்த்திகேயனுக்குன்னு சொன்னாரு. ஆ...அப்படியா சிவகார்த்திகேயன லீடா வச்சி பண்ணனுமான்னு கேட்டார். சார் பயங்கரமான டேலண்ட் சார். ஒரு சூப்பர்ஸ்டார் ஆகறதுக்கான அத்தனை தகுதிகளும் அவருக்கிட்ட இருக்குன்னு சொன்னாரு.