Connect with us

எனக்கு சுத்தமா விருப்பமே இல்ல… வெற்றிமாறன் தான் கட்டாயப்படுத்தி நடிக்க வச்சாரு….

vetrimaran

Cinema News

எனக்கு சுத்தமா விருப்பமே இல்ல… வெற்றிமாறன் தான் கட்டாயப்படுத்தி நடிக்க வச்சாரு….

தான் இயக்கும் அனைத்து படத்திற்கும் ஏதாவது ஒரு விருது வாங்கி தமிழ் சினிமாவை பெருமைப்படுத்தி வரும் இயக்குனர் என்றால் அது இயக்குனர் வெற்றிமாறன் தான். அதிலும் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணி தான் தமிழ் சினிமாவில் டாப் கூட்டணியாக உள்ளது.

அதிலும் குறிப்பாக இவர்கள் இருவர் கூட்டணியில் உருவான ஆடுகளம் படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு தேசிய விருதையும் தட்டி சென்றது. சேவல் சண்டையை மையப்படுத்தி உருவாகி இருந்த இப்படத்தில் பேட்டைக்காரனாக நடிகர் ஜெயபாலனும், அவருக்கு மனைவியாக நடிகை மீனாள் என்பவரும் நடித்திருந்தனர்.

meenal

இதில் நடிகை மீனாள் அவரது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதுவரை பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த மீனாள் ஆடுகளம் படத்தில் தான் முதல் முறையாக முழுநீள கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மீனாள் ஆடுகளம் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அதன்படி அவர் கூறியிருப்பதாவது, “இயக்குனர் வெற்றிமாறன் ஆடுகளம் படத்தில் என்னை கட்டாயப்படுத்தி தான் நடிக்க வைத்தார்.

aadukalam meenal

என் கதாபாத்திரத்தை பற்றி வெற்றிமாறன் கூறியவுடன் நான் முடியவே முடியாது என்று சொன்னேன். பிறகு முழு கதையையும் கூறிய பிறகு தான் நடிக்க சம்மதித்தேன்” என கூறியுள்ளார். வெற்றி மாறன் படத்தில் நடித்தால் அந்த நடிகர் அல்லது நடிகைக்கு திரையுலகில் நல்ல பெயர் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top