விஜய் இப்படி பேசியிருக்க கூடாது!.. சர்ச்சையை கிளப்பிய இளம் இயக்குனர்..
தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது எந்த அளவு ஒரு வளர்ச்சி அடைந்திருக்கிறார் என்று அனைவராலுமே யூகிக்க முடிகிறது. ஒவ்வொரு படங்களின் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் விஜய். தற்போது அவரின் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்ற படம் லியோ. லோகேஷ் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் தயாராகி வரும் லியோ படத்தின் படப்பிடிப்புகள் முக்கால்வாசி முடிந்த நிலையில் மீதமுள்ள படப்பிடிப்புகள் சென்னையின் ஆங்காங்கே பகுதிகளில் நடைபெற்ற வருகின்றன.
சினிமாவையும் தாண்டி விஜயின் பார்வை அரசியலின் பக்கமும் திரும்பி இருக்கின்றது. தனது மக்கள் இயக்கம் சார்பாக பல நல்ல உதவிகளை செய்து கொண்டு வருகிறார் விஜய். அவ்வப்போது ரசிகர் மன்ற செயலாளர்களை கூட்டி கூட்டமும் நடத்தி என்னென்ன தேவை என்பதை அறிந்து அதற்கு ஏற்ப பல நல்ல செயல்களை செய்து வருகிறார்.
இந்த நிலையில் இளம் இயக்குனரான விக்னேஷ் கார்த்திக் விஜயின் ஒரு படத்தின் உரையாடலை பற்றி ஒரு சர்ச்சையான பேச்சை கிளப்பியுள்ளார். விக்னேஷ் கார்த்திக் ஒரு ஆங்கராக இருந்து பல சீரியல்களில் நடித்து ஷார்ட் பிலிம்ஸ் தயாரித்து இப்பொழுது ஒரு இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். அவரின் இயக்கத்தில் சமீபத்தில் உருவான படம் அடியே.
இந்த நிலையில் விக்னேஷ் கார்த்திக்கிடம் ஒரு நிருபர் ஒரு நடிகருக்கு அரசியல் எந்த அளவுக்கு சரியானது என்ற ஒரு கேள்வியை கேட்டார். அதற்கு பதில் அளித்த விக்னேஷ் கார்த்திக் "உதாரணமாக விஜயின் ஒரு படத்தையே எடுத்துக் கொள்வோம் .சிவகாசி படத்தில் விஜய் அசினிடம் ஒரு பெண் எப்படி எல்லாம் இருக்க வேண்டும், எப்படி எல்லாம் இருக்கக் கூடாது என கூறியிருப்பார் .அதாவது அசின் அணிந்திருந்த ஆடையை விமர்சனப்படுத்தி விஜய் அந்த சமயத்தில் அந்த வசனத்தை கூறியிருப்பார்."
இதைப் பற்றி குறிப்பிட்டு பேசிய விக்னேஷ் கார்த்திக், விஜய் அந்த நேரத்தில் பேசிய வசனம் இப்பொழுது ஏற்புடையதாக இருக்காது. ஏனென்றால் பெண்கள் எவ்வாறு எல்லாம் ஆடை அணிய வேண்டும், அணியக்கூடாது என்பதை மற்றவர்கள் சொல்ல வேண்டும் என்றால் அவசியம் இல்லை .அவர்களுக்கு என்று ஒரு உரிமை இருக்கிறது .சுதந்திரம் இருக்கிறது. இதை மற்றவர்கள் பேசி சரி செய்ய முடியாது .ஆகவே அந்த நேரத்தில் விஜய் சொன்ன கருத்து மிகவும் தவறானது என்று விக்னேஷ் கார்த்திக் கூறினார்.
ஆனால் சமீப காலமாக விஜயின் படங்களில் பெண்களை உயர்வாக பேசும் வசனங்கள் இடம் பெற்று வருகின்றன. உதாரணமாக மாஸ்டர் படத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையை எதிர்த்து விஜய் சில விஷயங்கள் செய்வார். அது மிகவும் பாராட்டுக்குரியது என்றும் விக்னேஷ் கார்த்திக் கூறினார்.
இதையும் படிங்க : கமல் செய்த வேலையில் கடுப்பாகி பல மாதங்கள் பேசாமல் இருந்த எம்.ஜி.ஆர்!.. நடந்தது இதுதான்!…