விஜயகாந்த் சார் இது எனக்கு வேணவே வேணாம்னு சொன்னார்.! நான் கேக்கவே இல்லையே.!
பூவே உனக்காக, சூரிய வம்சம் போன்ற எவர்கிரீன் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன். அவரது திரைப்படங்கள் என்றால் ஒரே பாட்டில் ஓஹோ என்று ஹீரோ வளர்ந்து விடும் அளவிற்கு நமக்கு அவ்வளவு பாசிட்டிவான விஷயங்கள் இருக்கும். அவருடைய படங்களின் வசனங்கள் அனைத்தும் 90கிட்ஸ் களின் ஃபேவரட் என்றே கூறலாம்.
இவர் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது இயக்கத்தை விட்டு கொஞ்சம் விலகி இருக்கிறார். அண்மையில் இவர் ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
விஜயகாந்தை வைத்து இவர் வானத்தைப்போல திரைப்படத்தை இயக்கி இருந்தார். அந்த திரைப்படத்தின் கதையை முதலில் விஜயகாந்திடம் கூறுகையில் அதில் சண்டை காட்சிகள் எதுவும் இல்லையாம்.
விஜயகாந்துக்கும் அந்த படத்தின் கதையையும், விக்ரமன் ஷூட்டிங் எடுக்கும் விதத்தையும் பார்த்து, 'சார் உங்கள் படம் உங்கள் படமாகவே வளரட்டும். எனக்காக அதில் ஏதும் மாற்றம் கொண்டு வர வேண்டாம். எனக்கு இந்த படத்தில் சண்டைக்காட்சிகள் வேண்டவே வேண்டாம். படத்தின் கதையோட்டத்திற்கு என்ன தேவையோ அதை மட்டும் நான் செய்கிறேன்.' என கூறினாராம்.
இதையும் படியுங்களேன் - ரசிகர்களை காப்பாற்ற விஜய் எடுத்துள்ள கடினமான முடிவு இதுதான்.! நல்ல யோசிச்சிக்கோங்க.!
ஆனால், இயக்குனர் விக்ரமன் அதற்கு மறுத்துவிட்டாராம். விஜயகாந்த் ஒரு ஆக்ஷன் ஹீரோ. அவரது திரைப்படத்திற்கு வரும் அவரது ரசிகர்கள் கண்டிப்பாக விஜயகாந்த் ஆக்சன் காட்சிகள் எங்கே என தேடுவார்கள். அவர்களை ஏமாற்ற விரும்பவில்லை. எனவே ஆக்சன் கண்டிப்பாக ஒரு சண்டைக்காட்சி இருக்கும் என கூறி,
கிளைமாக்சில் ஒரு சண்டைக் காட்சியை வைத்து படத்தை இயக்கி முடித்திருப்பார் விக்ரமன். இந்த தகவலை விக்ரமன் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார். சினிமாவை விட்டு விஜயகாந்தும் தற்போது விலகியிருக்கிறார். விஜய் ஆண்டனி நடிக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தில் ஒரே ஒரு காட்சியில் விஜயகாந்த் தோன்றுவதாக கூறப்படுகிறது. அதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.