விஜயை ஒருத்தருமே நம்பல...நான் நம்புனேன்... பிரபல இயக்குனர் பேட்டி...
ட் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போதே அதை விட்டுவிட்டு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை விஜய்க்கு வந்தது. இதில், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு இதில் விருப்பமில்லை. எனவே, சண்டை போட்டு, போராடி அப்பாவின் சம்மதத்தை பெற்றார் விஜய்.
அவரை வைத்து யாரும் படமெடுக்க முன் வராத நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகரனே தனது சொந்த செலவில் மாண்புமிகு மாணவன், ரசிகன், தேவா, கோயமுத்தூர் மாப்ள என விஜயை வைத்து சில படங்களை இயக்கினார். அப்போதும் மற்ற இயக்குனர்கள் பார்வை விஜய் மீது விழவில்லை.
தேவா படத்தில் துறுதுறுவென நடித்த விஜயை இயக்குனர் விக்ரமனுக்கு பிடித்துப்போனது. தான் எழுதிய ‘பூவே உனக்காக’ படத்திற்கு அவர்தான் பொறுத்தமாக இருப்பார் என முடிவெடுத்து அவரை நடிக்க வைத்தார். அப்படத்தின் வெற்றி விஜயின் இமேஜையே மாற்றியது. மற்ற இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களும் விஜயை வைத்து படம் எடுக்க முன் வந்தனர். விஜயின் திரை வாழ்க்கையை மாற்றியதே அப்படம்தான்.
இதுபற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ள இயக்குனர் விக்ரமன் ‘நான் பூவே உனக்காக படத்தில் விஜயை நடிக்க வைக்க முடிவெடுத்த போது பலரும் அதை தடுத்தார்கள். விஜயின் இமேஜே வேற. ஒரு குடும்ப கதைக்கு அவர் செட் ஆக மாட்டார்’ எனக்கூறினார்கள். ‘நீங்க ரிஸ்க் எடுக்குறீங்க. குருவி தலையில பனங்காயை வைக்கிறீங்க’என அப்படத்தில் நடித்த ஒரு நடிகரே கூறினார்.
இதையும் படிங்க: அவர் Use பண்ணிட்டு தான் என்கிட்ட கொடுப்பார்.! அஜித்திற்கு இப்படி ஒரு பழக்கமா.?!
முதல் நாள் படப்பிடிப்பு முடிந்ததும் அந்த நடிகருக்கு போன் செய்து ‘குருவி தலையில பனங்காயை வைக்கிறேன்னு சொன்னீங்க. ஆனா, இந்த பையன் (விஜய்) தலையில பனங்காயை இல்ல, பாறாங்கல்ல வச்சாலும் தாங்குவான் சார்’னு சொன்னேன்.
அப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரிக்கே விஜய் மீது நம்பிக்கை இல்லை. பிரசாந்தை போட வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால், நான் மட்டும்தான் விஜய் இந்த கேரக்டருக்கு உயிர் கொடுப்பாருன்னு நம்பினேன்’ என விக்ரமன் பேசியுள்ளார்.
ஆனால், இதே விக்ரமன் ‘உன்னை நினைத்து’ என்கிற படத்தை எடுத்த போது அதில் நடிக்க விஜய் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே, அதில் சூர்யா நடித்தது குறிப்பிடத்தக்கது.
சினிமாவுல இதுலாம் சகஜமப்பா.