சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் சந்தானமா?.. சூப்பர் ஹிட் படத்தை டுபாக்கூர் படமாக்கும் முயற்சியில் விக்ரமன்..
தமிழ் சினிமாவில் குடும்ப பாங்கான படங்களை கொடுப்பதில் தலை சிறந்த இயக்குனராக விளங்கியவர் இயக்குனர் விக்ரமன். இப்பொழுதுள்ள மாஸ் ஹீரோக்களின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்த படங்கள் எல்லாம் விக்ரமின் இயக்கத்தில் வந்தவை தான்.
எப்படி விஜய்க்கு பூவே உனக்காக ஒரு டர்னிங் பாய்ண்டாக அமைந்ததோ அதே போல நடிகர் சூர்யாவிற்கும் ‘உன்னை நினைத்து’ படம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அந்தப் படத்தில் சூர்யாவின் நடிப்பு பரபரப்பாக பேசப்பட்டது. சாதுவான கதாபாத்திரம், எமோஷன், காதல் என அனைத்தையும் தன்னுள் அடக்கி அந்த கதாபாத்திரத்தில் மெருகேற்றியிருப்பார் சூர்யா.
சூர்யாவிற்கு ஜோடியாக சினேகாவின் கதாபாத்திரமும் அதற்கு இணையாக பேசப்பட்டது. முக்கோண காதல் கதையை மையமாக கொண்டு ஒரு லாட்ஜை முன்னிலைப் படுத்தி அந்தப் படம் நகர்ந்திருக்கும். படம் வெளியாகி பெரும் சாதனையை தட்டிச் சென்றது.
இந்த நிலையில் இயக்குனர் விக்ரமன் உன்னை நினைத்து படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் இருக்கிறாராம். ஆனால் அந்த படத்தில் சூர்யாவிற்கு பதிலாக நடிகர் சந்தானத்தை வைத்து இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் இருப்பதாக கூறினார்.
மேலும் இரண்டாம் பாகத்தில் சந்தானத்திற்கு உதவியாக சில நகைச்சுவை நடிகர்களை வைத்துக் கொண்டு அந்த லாட்ஜை ஒரு டுபாக்கூர்கள் எப்படி நடத்திச் செல்கிறார்கள் என்பது மாதிரியான ஒரு நகைச்சுவை போக்கில் படத்தை எடுக்க திட்டமிட்டிருப்பதாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறினார்.