அஜித் படத்தை இயக்குறதுல இருக்கிற பிரஷர்?.. என்ன பில்லா பட இயக்குனர் இப்படி சொல்லிட்டாரு!..
நடிகர் அஜித்தின் பில்லா திரைப்படத்தை இயக்கும்போது இருந்த பிரஷர் குறித்து பேட்டியில் பகிர்ந்து இருக்கின்றார் இயக்குனர் விஷ்ணுவரதன்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட மொழிகளில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் விஷ்ணுவரதன். தெலுங்கில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த குறும்பு என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான இவர் அதன் பிறகு தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களை இயக்கியிருக்கின்றார். தமிழில் நடிகர் அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்திருக்கின்றார்.
இதையும் படிங்க: வானிலை நிலவரம் மாதிரி இருக்கே அஜித் படத்தோட நிலைமை!.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு!..
இந்த திரைப்படம் அஜித்தின் கெரியரில் மட்டுமல்லாமல் விஷ்ணுவர்தன் கெரியரிலும் சிறந்த படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து பாலிவுட்டிலும் களமிறங்கிய விஷ்ணுவரதன் கரண் ஜோகர் தயாரிப்பில் ஷெர்ஷா என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படமும் ஹிந்தியில் மிகப்பெரிய ஹிட்டு கொடுத்தது. முன்னணி இயக்குனர் என்ற பெயரையும் பெற்று கொடுத்தது.
தற்போது நேசிப்பாயா என்ற திரைப்படத்தை தமிழில் இயக்கி முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் மறைந்த நடிகர் முரளியின் இரண்டாவது மகன் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கின்றது. இந்த திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றார் இயக்குனர் விஷ்ணுவரதன்.
அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்த விஷ்ணுவர்தன் அஜித் திரைப்படங்களை இயக்கியது குறித்து பகிர்ந்து இருக்கின்றார். 'அஜித்தின் பில்லா படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்த போது அதனை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டேன். தெருவில் விளையாடி கொண்டிருந்த ஒருவருக்கு ஸ்டேடியத்தில் ஆடும் வாய்ப்பு எப்படியோ அப்படித்தான் தனக்கு பில்லா திரைப்படம்.
அது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை இயக்கும்போது எனக்கு ஒருவித பிரஷர் இருந்தது. அதற்கு காரணம் நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே பில்லா என்ற திரைப்படத்தில் நடித்து மாஸ் காட்டி இருப்பார். அப்படி இருக்கும் சூழலில் அஜித்தை வைத்து இயக்கும் இந்த திரைப்படமும் சிறப்பாக இருக்க வேண்டும் என்கின்ற பிரஷர் இருந்தது. அந்த சமயத்தில் பலரும் வளர்ந்து வரும் நிலையில் இது போன்ற ரிஸ்க்கெல்லாம் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியினார்கள்.
இதையும் படிங்க: விக்ரம் வசூலை முறியடித்த அமரன்!.. ஆனாலும் வட போச்சே ஃபீலிங்கில் ஏ.ஆர்.முருகதாஸ்!..
ஆனால் நடிகர் அஜித் என் மீது நம்பிக்கை வைத்திருந்தார். இந்த படத்தை இயக்குவதற்கு தனக்கு நிறைய நம்பிக்கை கொடுத்தார். என் மீது மட்டுமில்லாமல் அவர் படங்களை எடுக்கும் அனைத்து இயக்குனர்கள் மீதும் சிறந்த நம்பிக்கை வைப்பார். அதுவே படத்தை சிறப்பாக எடுக்க வேண்டும் என்கின்ற பிரஷரை ஏற்படுத்தும்.
மேலும் அதுவரை வந்த டான் கேரக்டர்களை எல்லாம் தாண்டி ஒரு வித்தியாசமான கேரக்டர் இந்த திரைப்படத்தில் இருந்தது. இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் வரை யாருக்குமே நம்பிக்கை கிடையாது. அதேபோலதான் ஆரம்பம் படத்தை இயக்கும் போதும் பில்லா படத்தை போன்று இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்' என்று அந்த பேட்டியில் பகிர்ந்து இருக்கின்றார் விஷ்ணுவர்தன்.