Connect with us
visu

Cinema History

ரஜினி மட்டும்தான் நடிகரா?!. நாங்களாம் படம் எடுக்கலயா?!.. நடிகை விஷயத்தில் கடுப்பான விசு…

தமிழ் சினிமாவில் குடும்ப படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்த விசு. சினிமாவுக்கு வருவதற்கு முன் நாடகங்களை இயக்கி கொண்டிருந்தார். பல நாடகங்களை இவர் நடத்தியுள்ளார். இயக்குனர் சிகரம் பாலச்சந்தரிடம் உதவியாளராக இருந்து பின்னர் இயக்குனராக மாறியவர்.

சம்சாரம் அது மின்சாரம், திருமதி ஒரு வெகுமதி, மணல் கயிறு, டவுரி கல்யாணம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். பல படங்களில் நடித்தும் இருக்கிறார். அதோடு, பல படங்களுக்கு கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் வேலை செய்துள்ளார். அதோடு, தொலைக்காட்சியில் அரட்டை அரங்கும் எனும் நிகழ்ச்சியையும் நடத்தி பிரபலமானவர் இவர்.

visu

visu

விசுவின் நாடகங்களிலும், திரைப்படங்களிலும் நடித்தவர் டெல்லி கணேசன். சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய அவர் விசுவை பற்றி தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். நான் டெல்லியில் சில நாடகங்களில் நடித்துவிட்டு பின்னர் சென்னை வந்தேன். விசுவின் நாடகத்தில்தான் முதலில் நடித்தேன். என்னுடைய நடிப்பு விசுவுக்கு மிகவும் பிடித்துப்போனது. அடுத்து அவர் இயக்கிய பட்டினப்பிரவேசம் என்கிற நாடகத்திலும் நடித்தேன். இதை பார்த்துதான் இயக்குனர் பாலச்சந்தர் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அப்படித்தான் சினிமாவில் நுழைந்தேன்.

madhuri

விசுவுக்கு கோபம் அதிகமாக வரும். பாலச்சந்தரிடம் தயாரிப்பாளர் நடராஜன் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது விசுவின் படத்தில் நடித்து வந்த நடிகை மாதுரியை, ரஜினி படம் ஒன்றில் நடிப்பதற்காக மும்பைக்கு அனுப்பிவிட்டார்.

இதனால் கோபமடைந்த விசு அன்றைய படப்பிடிப்பை கேன்சல் செய்தார். நடராஜனிடம் ‘என்னை கேட்காமல் என் படத்தில் நடிக்கும் நடிகையை நீங்கள் எப்படி வேறு படத்திற்கு அனுப்பலாம். ரஜினி மட்டும்தான் நடிகரா?.. நாங்களாம் சினிமாவில் இல்லையா?’ என பேசிவிட்டார். விசுவை சமாதனப்படுத்த பாலச்சந்தரும் முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. அவர் அவ்வளவு கோபக்காரர்’ என டெல்லி கணேசன் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: சிவாஜியுடன் மீண்டும் இணைந்து நடிக்கலாமே? நிரூபர் கேட்ட கேள்விக்கு எம்ஜிஆர் சொன்ன பதில் என்ன தெரியுமா?

google news
Continue Reading

More in Cinema History

To Top