அப்பு கதாபாத்திரம் செய்யாதே… கமலை எச்சரித்த முன்னணி இயக்குனர்… எதற்காக தெரியுமா?

Published On: November 9, 2022
apoorva sagotharkal
---Advertisement---

கமலின் இரட்டை வேட படங்களில் முக்கிய இடம் பிடித்திருப்பது அபூர்வ சகோதரர்கள் படம் தான். அப்படத்தில் குள்ள மனிதனாக கமல் நடித்திருந்த அப்பு கதாபாத்திரம் மிகப்பெரிய அப்ளாஸை பெற்றது. அதில் கமல் எப்படி நடித்தார் என்ற யூகமே சிலரிடம் இருந்தாலும் கமல் தரப்பில் இருந்து இன்னும் அந்த ரகசியம் காக்கப்பட்டு தான் இருக்கிறது.

இன்றைய காலத்தில் சிஜியில் செய்யும் இது வெகு சாதாரணம் தான். ஆனால் இந்த தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் சிஜியில்லாமல் கமல் எப்படி செய்தார் என்பதே பெரும் ஆச்சரியம். ஆனால் இதற்கு சில யுத்திகள் பயன்படுத்தப்பட்டது. முதலில் நின்றப்படியே எடுக்கும் ஷாட்களுக்கு குழி தோண்டி முட்டிக்கு பிரத்யேகமான ஷூட் போட்டு எடுத்திருந்தனர். தொடர்ந்து, அவர் நடக்கும் காட்சிகளுக்கு நீள குழியை தோண்டி வைத்து எடுத்தனர். ஆனால், வீட்டின் உள்ளே எடுக்கும் காட்சிகளுக்கு கொஞ்சம் சிரமம் இருந்ததாம்.

அபூர்வ சகோதரர்கள்
அபூர்வ சகோதரர்கள்

மற்ற கதாபாத்திரங்களை 18 இன்ச் மேடையில் நிறுத்தி கமலுக்கு குழி தோண்டி நடிக்க வைத்தனராம். அதுமட்டுமல்லாமல், அப்பு கமல் காட்சிக்கு கேமராவும் குழிக்குள் இறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முட்டி மடக்கி கமல் உட்காரும் காட்சிகளுக்கு கமலுக்கு பிரத்யேகமான காலை சகாதேவன் என்பவர் உருவாக்கி கொடுத்தாராம். அதன் மூலம் கமல் இடுப்பு வரை வைத்துகொண்டு இந்த செயற்கை காலை கொண்டும் சில காட்சிகள் எடுக்கப்பட்டது. மேலும் அவரின் சட்டை கழுத்து வரை மூடி இருக்கும்படியே பார்த்துக்கொண்டனர்.

kamal
balachandar- kamal

முதலில் இந்த கதாபாத்திரத்தினை படமாக்கவும், கமல் குள்ள மனிதனாகவும் நடிக்க வேண்டாம் என இயக்குனர் பாலசந்தர் எச்சரித்தாராம். இருந்தும், அவரை மீறி தான் கமல் அதிக மெனக்கெடலுடன் தான் இந்த படத்தினை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.