அண்ணன் விஜய் அரசியலுக்கு சென்றதால் திரையுலகிற்கு இழப்பு இல்லை – இயக்குநர் அட்லி
விஜய் சினிமாவில் நடிப்பதைத் தொடராதது குறித்து இயக்குநர் அட்லி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வரும் நிலையில், அவர் சினிமாவில் நடிப்பதைத் தொடராதது குறித்து இயக்குநர் அட்லி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அட்லி தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்த பத்தா கடந்த வியாழன் அன்று வெளியானது. நல்ல விமர்சனங்களை பெற்று வரும் இப்படம் வசூலிலும் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் நேற்று இயக்குனர் அட்லி தனது மனைவியுடன் திருச்செந்தூர் கோவிலில் தரிசனம் செய்தார். பின்னட் நெல்லைக்கு வருகை தந்த அவர் பத்தா படத்தினை பார்க்க திரையரங்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்க்ஜளை சந்தித்தார். விஜய் சினிமாவில் இல்லாமல் அரசியலுக்கு சென்றுள்ளார். அதன் காரணமாக திரையுலகிற்கு எந்த இழப்பும் இல்லை. மக்களுக்கு நல்லது நடந்தால் எதுவும் இழப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், விஜய் மக்களுக்காக நல்ல விஷயங்களை செய்து வருவது மகிழ்ச்சியளிப்பதாகவும், அவர் அரசியலுக்குச் சென்றிருந்தாலும் சினிமா தொடர்ந்து தனது பாதையில் பயணிக்கும் என்றும் அட்லி குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி முதல்வர் விஜயின் மகன் சஞ்சய் நமது தம்பி. அவர் நடித்தால் அவரை வைத்து நல்ல படம் பண்ணுவோம் என்றும் கூறினார்.
இயக்குநர் அட்லி மற்றும் விஜய் கூட்டணி தமிழ் சினிமாவில் வசூல் சாதனைகளை உருவாக்கிய கூட்டணிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டணியின் முதல் படமான தெறி 2016-ல் வெளியானது. இப்படம் உலகளவில் ரூ.150 கோடியை கடந்ததாக வர்த்தகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனைத் தொடர்ந்து வெளியான மெர்சல் விஜய்யின் வசூல் சாதனையை மேலும் உயர்த்தியது. இப்படத்தின் உலகளாவிய வசூல் சுமார் ரூ.200–260 கோடி வரையிலான வசூல் எனக் கூறப்படுகிறது. 2019-ல் வெளியான பிகில் படமும் விஜய்–அட்லி கூட்டணியின் மற்றொரு மிகப்பெரிய வசூல் படமாக அமைந்தது. வெளியான நான்கு நாட்களிலேயே உலகளவில் ரூ.150 கோடியை கடந்ததாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி இப்படத்தின் உலகளாவிய வசூல் சுமார் ரூ.295 கோடி என கூறப்படுகிறது.



