ஜெய்பீம் சந்துருவுக்கு திரையுலகினர் தந்த மரியாதை – வைரல் புகைப்படம்

Published on: November 17, 2021
---Advertisement---

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியை துவங்கி நீதிபதியாக மாறி பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியவர் சந்துரு. தற்போது ஓய்வு பெற்றுவிட்டார்.

1993ம் ஆண்டு கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தை அடுத்துள்ள கம்மாபுராம் ஒன்றியத்தை முதனை என்கிற கிராமத்தில் வசித்து வந்த ராஜாக்கண்ணு என்கிற குறவர் இனத்தவரை போலீசார் ஒரு திருட்டு வழக்கில் கைது செய்து காவல்துறை லாக்-அப்பில் வைத்து தாக்கியதில் அவர் மரணமடைந்தார்.

இந்த வழக்கை எடுத்து நடத்தியவர்தான் சந்துரு. 13 வருடங்கள் போராடி அவர் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்தார். மேலும், ராஜாக்கண்ணு எந்த தவறும் செய்யவில்லை என்பதையும் அவர் நிரூபித்தார்.

chandru

இந்த சம்பவத்தைத்தான் சூர்யா ஜெய்பீம் திரைப்படமாக உருவாக்கினார். இப்படம் பலரின் பாராட்டையும் பேற்றுள்ளது.

இந்நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவுக்கு மரியாதை தரும் வகையில் பாரதிராஜா, பாக்கியராஜ், பிரபுதேவா, பார்த்திபன் உள்ளிட்ட சில இயக்குனர்கள் நேரில் சென்று சந்துருவை வரைந்த ஓவியத்தை அவருக்கு பரிசாக கொடுத்து கௌரவித்தனர். இந்த புகைப்படத்தை சந்துரு தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

chandru

 

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment