விலங்குகளை விட்டு நடிகர்களை துன்புறுத்திய இயக்குனர்கள்... கேட்டாலே நடுங்க வைக்கும் சம்பவங்கள்...

Actors
சினிமாவில் விலங்குகளை கொடுமைப்படுத்தினால் ப்ளூ க்ராஸ் சண்டைக்கு வந்துவிடும். ஆனால் சில இயக்குனர்கள் நடிகர்களையே வச்சு செய்திருக்கிறார்கள். கேட்ட கொஞ்சம் ஜெர்க் ஆகும் என்பதே உண்மை.
மரியான்:
நடிகர் தனுஷ் நடித்த இந்த படத்தில் அவர் மீனவராக நடித்திருந்தார். அதற்காக அவர் ரொம்பவே மெனக்கெட்டாராம். கடலுக்குள் மூச்சை அடக்கி அவர் நிற்பது போல காட்சிகள் இருக்கும். கடலிற்குள் ரொம்ப நேரம் அப்படி மூச்சை அடிக்கினால் மூர்ச்சையாகி விட வேண்டியது தான்.

Mariyaan
அந்த படத்திலேயே, தனுஷ் சோமாலிய கொள்ளைக்காரர்களிடம் இருந்து தப்பி வரும் போது காய்ந்து போன மரத்தின் கீழ் உட்கார்ந்து இருப்பார். அப்போது அங்கு புலி வருவது போல கனவு காண்பார். படத்தில் கனவு தான் என்றாலும் உண்மையான சிறுத்தையை வைத்து காட்சி எடுத்திருப்பர்.
அந்த காட்சி பாலைவனத்தில் எடுக்கப்பட்டதால் சிறுத்தை தப்பிவிடும் என்பதால் பெரிய கூண்டை போட்டு அடைத்தே அந்த காட்சி எடுக்கப்பட்டது. சிறுத்தை ஒரு மாமிச விலங்கு என்பதால் பழகிய மனிதரிடம் கூட எப்ப வேண்டும் என்றாலும் கோபப்படும். இருந்தும் தன் உயிரை பணயம் வைத்து நடித்திருப்பார்.
விக்ரம்:
ஐ திரைப்படத்துக்காக விக்ரம் தனது உடல் எடையை 55 கிலோவிற்கும் கீழ் குறைத்தார். மற்ற நடிகர்கள் உடல் எடையை குறைத்தாலும் விக்ரம் எக்கசக்கமாக குறைத்து அழகையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு பார்க்கவே பரிதாபமாக காட்சி அளிப்பார். அதுமட்டுமல்லாமல் விக்ரம் இந்த படப்பிடிப்பு சமயத்தில் நிறைய முறை மயங்கியும் விழுந்து இருக்கிறாராம். கூன் விழுந்த மாதிரி இருக்க மேக்கப்பே சிரமம் எடுத்து தான் போட்டிருக்கிறார்.

Avan Ivan
அவன் இவன்:
இந்த படத்தில் விஷால் தன் கண்ணை ஒன்றரை கண்ணாக மாற்றி நடித்திருப்பார். அது அவ்வளவு எளிதில்லை. கொஞ்ச நேரத்திலேயே மயக்கம் கூட வந்துவிடுமாம். ஏன் அருகில் இருப்பவர்கள் கூட மங்கலாக தான் இருப்பார்களாம். இதனால் அவருக்கு இன்றும் தலை வலியை அனுபவித்து வருகிறாராம்.