நாம வளர்த்துவிட்ட பையன்!.. ஹீரோக்களின் இமேஜ் புரியாமல் தப்பு பண்ணும் இயக்குனர்கள்...

by சிவா |   ( Updated:2022-12-09 07:11:28  )
gowtham
X

gowtham

தமிழ் சினிமா என்பது இயக்குனர்களின் கையில் இருந்தது ஒரு காலம். எம்.ஜி.ஆர். சிவாஜி காலத்தில் தயாரிப்பாளர்கள்தான் கடவுளாக இருந்தனர். அவர்களை முதலாளி என அழைப்பார்கள். அடுத்த இடத்தில் இயக்குனர்கள்தான் இருந்தனர்.

எம்.ஜி.ஆரின் படங்கள் பெரிய ஹிட் அடித்து அவர் வசூல் மன்னனாக இருந்ததால், அதை மெல்ல மாற்றி அவர் சொல்பவர்தான் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என மாற்றினார். அவரின் காலத்தில்தான் சினிமா நடிகர் கையில் மாறியது. ஆனாலும், அவரை தவிர மற்ற நடிகர்கள் இயக்குனர்களை நம்பித்தான் இருந்தனர். ரஜினி, கமல் காலத்தில்கூட இயக்குனர்கள் முக்கிய பங்கு வகித்தனர். ரஜினி சூப்பர்ஸ்டார் ஆகி வசூல் மன்னனாக மாறிய பின் எம்.ஜி.ஆரை போல இவரே இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களை முடிவு செய்தார். கமலும் அவருக்கு பிடித்த இயக்குனர்களோடு மட்டுமே பயணித்தார்.

rajini

நடிகர்களை இயக்குனர்கள்தான் உருவாக்குகிறார்கள். அவர்களுக்கு விதவிதமான கதாபாத்திரங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க வைக்கிறார்கள். அப்படி வளர்ந்த நடிகர் பல படங்களில் நடித்து வளர்ந்த பின்பு அவரின் இமேஜும், மார்கெட் மதிப்பும் மாறிவிடும். ஆனால், சில இயக்குனர்கள் அதை புரிந்துகொள்ளாமல் அந்த நடிகர் வாய்ப்பு தேடியபோது அவரை எப்படி பார்த்தார்களோ இப்போதும் அப்படியே பார்ப்பார்கள். படப்பிடிப்பிலும் அப்படியே நடத்துவார்கள். இதனாலேயே அவரின் இயக்கத்தில் மீண்டும் நடிக்க அந்த நடிகர்கள் விரும்புவதில்லை.

bala

சேது படத்தை பார்த்த நடிகர் சூர்யா பாலாவை தேடிச்சென்று ‘என்னை வைத்து படம் இயக்குங்க அண்ணா’ என அவரின் காலில் விழுந்தார். அப்படி உருவான திரைப்படம்தான் நந்தா. நந்தா படம் மூலம்தான் சூர்யாவுக்கு ‘காக்க காக்க’ வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் அதே சூர்யாவை வைத்து பிதாமகன் படம் எடுத்தார் பாலா. சூர்யாவுக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்து வேலை வாங்கியிருந்தார் பாலா. சில படங்களில் நடித்திருந்தாலும் சூர்யா ஒரு முழுநடிகராக பரிமாணம் எடுத்தது பிதாமகனில்தான். இந்த நன்றி உணர்ச்சி சூர்யாவுக்கு எப்போதும் இருக்கிறது.

அதனால்தான், வாய்ப்பு இல்லாமல் இருக்கும் பாலாவை அழைத்து உங்கள் இயக்கத்தில் நான் நடிக்கிறேன் என முன்வந்தார். அப்படி உருவான திரைப்படம்தான் வணங்கான். ஆனால், முழுக்கதையையும் தயார் செய்யாமலும், திட்டமிடல் இல்லாமலும் படப்பிடிப்பை நடத்தினார் பாலா. மேலும், எடுத்த காட்சிகளை மீண்டும் மீண்டும் எடுக்க அதிருப்தி அடைந்த சூர்யா இப்படத்திலிருந்தே விலகி விட்டார்.

surya1_cine

surya bala

கவுதம் மேனனுக்கும் இதேதான் நடந்தது. காக்க காக்க படம் மூலம் சூர்யாவை பக்கா ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியது அவர்தான். அப்படத்தின் வெற்றியே சூர்யாவின் மார்க்கெட் மதிப்பை அதிகரித்தது. ஆனால், துருவ நட்சத்திரம் படத்திற்கு முழுக்கதையும் உருவாக்காமல் படப்பிடிப்புக்கு செல்ல விரும்பினார்.

ஆனால், அதில் சூர்யாவுக்கு உடன்பாடில்லை. சில மாதங்கள் பொறுத்து பொறுத்து பார்த்து அந்த படத்திலிருந்தே விலகுவதாக அறிவித்தார். அதன்பின், அப்படத்தில் விக்ரம் நடித்தார். ஆனாலும், இன்னும் அப்படத்தின் கிளைமேக்ஸை கவுதம் மேனன் எடுக்கவில்லை. படம் அப்படியே நிவற்கிறது.

வளர்த்துவிட்ட இயக்குனர்களை மறக்கும் ஹீரோக்கள் ஒருபுறம் இருந்தாலும், வளர்ந்த ஹீரோக்களின் இமேஜ் புரியாமல் நடந்துகொள்ளும் இயக்குனர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இதையும் படிங்க: கிளுகிளுப்பு ஏறி கிறுக்குபிடிக்குது செல்லம்!…பால்மேனியை பளிச்சின்னு காட்டும் ஸ்ரீமுகி…

Next Story