இயக்குனர் ஷங்கர் படங்கள் என்றாலே ஒரு பிரம்மாண்டம் இருக்கும். கடந்த 32 வருடங்களாக இந்தியாவின் தலைசிறந்த இயக்குனராக ஷங்கர் உள்ளார். இப்போது அவரது படங்களில் வந்த சண்டைக்காட்சிகளைப் பற்றிப் பார்ப்போம்.
ஜென்டில் மேன் படத்தின் ஓபனிங் இதுதான். ஊட்டியில் மலைப்பாதையில் டிரெய்ன் போகுது. அதுக்கு மேல ஒரு ஜீப் பறக்குது. அந்த ஜீப்பை ஒரு போலீஸ் பைக் வந்து அட்டாக் பண்ணி ரெண்டு பேரும் சிதறி விழறாங்க. அப்பவே இவ்ளோ பிரமிப்பா எடுத்துருப்பாங்க. அந்தப் படத்தில் சண்டைக்காட்சிகள் எல்லாமே அனல் பறக்கும். நகைக்கடை பைட்டும் செம ஜாலியா இருக்கும்.
காதலன் படத்துலயும் டான்ஸ் மட்டுமில்லாம செம ஜாலியா பைட்டும் பண்ணியிருப்பாரு. முதல்வன் படத்துல செகண்ட் ஆப்ல சாக்கடை பைட் செமயாக இருந்தது. அதே போல அந்நியன் அம்பியாக வந்து மிரட்டும் சண்டைக்காட்சிகள் பிரம்மாண்டமா இருக்கும். அதே போல சிவாஜி படத்துல பின்னி மில் கூரையில் ரோப்பே இல்லாமல் ஓடவிட்டு அதிரடி சண்டைக்காட்சிகள் இருக்கும். 40 கார்கள், கிளைமாக்ஸ் மாடி பைட் எல்லாமே கிளாஸா இருக்கும்.
இப்போது உலகநாயகன் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன் 2. இதில் ஆக்ஷன் மற்றும் அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைய இருக்கு. இந்தியன் முதல் பாகத்திலேயே சண்டைக்காட்சியில் வர்மக்கலையை பயன்படுத்தி மிரட்டி இருப்பார்.
இந்தியன் தாத்தாவாக இருக்கும் போது எப்படி சண்டை போடுவார் என்று கேள்வி எழலாம். அதற்காக அவர் சுபாஷ் சந்திரபோஸ் குரூப்பைச் சேர்ந்தவர். வர்மக்கலையைக் கற்றவர் என்ற பாயிண்டை வைத்து கலக்கியிருப்பார். இன்டர்வல் பிளாக், கிளைமாக்ஸ் சீன் சேஸிங் எல்லாமே பரபரப்பாக இருக்கும்.
ஷங்கர் படம் என்றாலே ஆக்ஷன் காட்சிகள் அனல் பறக்கும். தற்போது இந்தியன் தாத்தா 100 வயதை நெருங்கியவர். இந்தப் படத்தில் பைட் சீன் எப்படி இருக்கும்? அவர் வர்ற ஒவ்வொரு சீனும் தியேட்டரில் அனல் பறக்கும் என ஷங்கரே சொல்லி இருக்கிறார். 5 பைட் மாஸ்டர்கள் இருக்காங்க.
காஜல் அகர்வாலுக்கும் அதிரடி சண்டைக்காட்சி, தென்னாப்பிரிக்கா டிரெய்ன் பைட் மாஸா இருக்கும். ஓபனிங் பைட் அனல் அரசு, கிளைமாக்ஸ் பைட் அன்பறிவு பண்ணியிருக்கிறார்கள். இடையில் பீட்டர் ஹெய்ன் உள்பட பல ஸ்டண்ட் மாஸ்டர்கள் பைட் அமைத்துள்ளார்கள்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…