விஜய், சூர்யா கூட சேர்ந்து ஆடனும்...! சொல்கிறார் 80களின் கனவுக்கன்னி....!
பார்த்ததும் கிறங்குகிற தோற்றம், சொக்கவைக்கும் பார்வை, தன் பார்வையால் எல்லாரையும் வசியம் செய்தவர் நடிகை டிஸ்கோ சாந்தி. இவர் 80களின் கனவுக்கன்னியாக அனைவரின் தூக்கத்தையும் கெடுத்தவர். இவர் அனைத்து முன்னனி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் அனைத்து மொழி சூப்பர் ஸ்டார்களின் படத்திலும் நடித்துள்ளார். அந்த காலங்களில் சில்க் ஸ்மிதா ஒரு பக்கம் என்றால் டிஸ்கோ சாந்தி மறு பக்கம் என்று ஒட்டு மொத்த சினிமா உலகையும் தன் கவர்ச்சி நடனத்தால் கட்டிப் போட்டுக் கொண்டிருந்தனர்.
இவர் தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஸ்ரீஹரி இவரை ஒரு தலையாய் காதலித்தாராம். கொஞ்ச நாள் கழித்து தான் இவர் சம்மதம் சொல்ல இவர்களின் திருமணம் நடைபெற்றதாம். ஆனால் விதி விட்டு வைக்கவில்லை. இவரின் கணவர் உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டாராம்.
அவர் இறப்பிற்கு பின் அவர் ஆரம்பித்த சமூக சேவைகளை டிஸ்கோ சாந்தி தான் தற்போது கவனித்து வருகிறாராம். ஆனால் டிஸ்கோ சாந்திக்கு மறுபடியும் திரையுலகிற்கு வரவேண்டும் என எண்ணம் இருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் இப்ப உள்ள விஜய் , சூர்யா போன்ற நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஆட வேண்ட்டும் என ஆசைப்படுவதாக ஒரு பிரபல செய்தி நாளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.