More
Categories: Cinema News latest news

ஆத்தாடி!.. ஒரே ஒரு பாட்டுக்கு 21 தடவையா?!… கங்குவா பட நடிகை பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!…

கங்குவா படத்தில் வந்த yolo பாடலுக்கு திஷா பதானி 21 முறை காஸ்டியூம் மாற்றி இருப்பதாக சுவாரசிய தகவலை கூறி இருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சூர்யா நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். மேலும் சூர்யாவுடன் இணைந்து பாலிவுட் பிரபலமான திஷா பதானி நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கின்றார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: என்கிட்ட இருந்து போகும் போது இப்படித்தான் போகனும்.. அஜித் சொன்ன விஷயம்

மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பீரியட் படமாக எடுக்கப்பட்டிருந்த இப்படத்தின் மீது ஏகப்பட்ட நம்பிக்கை இருந்தது. இப்படத்திலிருந்து வெளியான சூர்யாவின் புகைப்படங்களை பார்த்துவிட்டு ரசிகர்கள் படம் பாகுபலி விட வேறு லெவலில் இருக்கப் போகின்றது என்றெல்லாம் கற்பனையில் மிதந்து வந்தார்கள். ஆனால் அதை அனைத்தையும் சுக்குநூறாக உடைத்து எறிந்து விட்டார் இயக்குனர் சிறுத்தை சிவா.

அதுமட்டுமில்லாமல் படக்குழுவினர் கடந்த ஒரு மாதங்களாக இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று ப்ரோமோஷன் செய்து வந்தார்கள். ஒவ்வொரு ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் மேடைக்கு மேடை படம் குறித்து ஆஹா ஓஹோ என்று கொடுத்த பில்டப் என்பது கொஞ்சம் நஞ்சம் கிடையாது. அதிலும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒரு படி மேலே சென்று விட்டார் என்று தான் கூற வேண்டும்.

yolo song

படம் 2000 கோடி வசூல் செய்யும். முதல் பாகத்துடன் போட்டிக்கு வருபவர்கள் கூட படத்தைப் பார்த்துவிட்டு இரண்டாவது பாகத்துடன் எந்த படமும் போட்டிக்கு வராது என்று ஓவர் கான்பிடெண்டாக பேசியிருந்தார். இதையெல்லாம் கேட்டு நம்பி சென்று படத்தை பார்த்த ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சி மட்டுமே மிச்சமாகி இருக்கின்றது.

அதிலும் பாலிவுட்டில் இருந்து நடிகை திஷா பதானி கதாநாயகியாக இறக்கி வெறும் அரை மணி நேரத்திற்கு மட்டும் வைத்துவிட்டு ஒரு பாடலுக்கு நடனமாட வைத்து அனுப்பி விட்டார்கள். அந்த ஒரு பாடலுக்கு படக்குழுவினர் செய்த செயல் குறித்து பேட்டி ஒன்றில் திஷா பதானி பேசியிருந்தார்.

இதையும் படிங்க: Kanguva: ஒரே படத்துல நடுத்தெருவுக்கு வரப்போறாரு?!… 2000 கோடி அம்பேல்… இப்படி போட்டு பொளக்குறீங்களே!…

யோலோ பாடலின் படப்பிடிப்பின் போது தொடர்ந்து 21 உடைகளை தான் மாற்ற வேண்டி இருந்ததாக கூறியிருந்தார். பாடல் காட்சி மிகவும் சிறப்பாகவும் ரசிகர்களுக்கு ட்ரீட்டாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக இப்பாடலை சிறப்பாக வடிவமைத்திருந்ததாக கூறியிருந்தார். இந்த ஒரு பாடலை மட்டுமே 4 நாட்கள் எடுத்தார்களாம். இந்த செய்தி தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் திஷா பதானி உடையில் கவனம் செலுத்தியதற்கு கொஞ்சம் கதையில் கவனம் செலுத்தி இருக்கலாம் என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.

Published by
ramya suresh

Recent Posts