கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு மாடலிங் துறைக்கு வந்தவர்தான் திஷா பத்தானி. நிறைய அழகி போட்டிகளில் கலந்து கொண்டார். அப்படியே பாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது. ஆனால், அங்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

எனவே, தெலுங்கு சினிமா பக்கம் போனார். இவர் முதலில் நடித்ததே ஒரு தெலுங்கு படத்தில்தான். இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் மூலம் ஹிந்தியில் நடிக்க துவங்கினார். அதன்பின் தொடார்ந்து பல படங்களிலும் நடித்துவிட்டார்.
சுந்தர் சி இயக்கத்தில் அதிக பட்ஜெட்டில் உருவாவதாக அறிவிக்கப்பட்ட சங்கமித்ரா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகவாகவிருந்தார். ஆனால், அந்த படம் டிராப் ஆனது. அதன்பின் பல வருடங்கள் கழித்து இப்போது கங்குவா படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் திஷா பத்தானிக்கு முக்கியத்துவம் ஏதுமில்லை. ஆனால், கங்குவா படம் ஹிந்தி மொழியிலும் டப் செய்யப்பட்டு வெளியானதால் பாலிவுட் நடிகை இருக்க வேண்டும் என்பதற்காக அவரை நடிக்க வைத்திருக்கிறார்கள். எனவே, சில காட்சிகளிலும் ஒரு பாடல் காட்சியிலும் ஆடிவிட்டு போயிருக்கிறார்.

ஒருபக்கம், பிகினி உள்ளிட்ட கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், கடற்கரையில் கிளுகிளுப்பு காட்டி திஷா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளசுகளை தூங்கவிடாமல் செய்திருக்கிறது.

