இதுக்கா என்ன கூப்பிட்டீங்க!. கவர்ச்சி நடிகையை நம்ப வச்சி கழுத்தறுத்த கங்குவா டீம்!..
ஒரு படத்திற்கு ஒரு நடிகை புக் செய்வார்கள். இந்த படத்தில் உங்களுக்கு பவர்புல்லான வேடம்.. நீங்கள்தான் படத்தின் முதுகெலும்பு என்றெல்லாம் அவரிடம் பில்டப் ஏத்திவிடுவார்கள். ஆனால், அவர்களை வைத்து சில காட்சிகளை மட்டுமே எடுத்துவிட்டு வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள். இது பல நடிகைகளுக்கும் நடந்துள்ளது.
அண்ணாத்த திரைப்படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கி வரும் திரைப்படம் கங்குவா. இப்படத்தின் ஹீரோவாக சூர்யா நடித்து வருகிறார். இப்படத்தில் வரும் பிளாஷ்பேக் காட்சிகள் பேசும்படி இருக்கும் என சொல்லப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: ரஜினி விஜய் ரெண்டு பேரையும் வச்சி!.. நெல்சனுக்கு வந்த விபரீத ஆசை!. வொர்க் அவுட் ஆகுமா?!..
இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் கொடைக்கானல் மழைப்பகுதியில் நடைபெற்று வருகிறது. மிகவும் அதிக பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருகிறது. ராஜமவுலி எடுத்த மகதீரா படம் போல இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, பாபி தியோல், கோவை சரளா, யோகிபாபு, ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
பாலிவுட்டில் கவர்ச்சி கன்னியாக வலம் வருபவர் திஷா பத்தானி. இன்ஸ்டாகிராமில் அம்மணி புகைப்படங்களை பகிர்ந்தால் சும்மா பற்றி எரியும். பிகினி உடைகளில் அவர் காட்டும் கவர்ச்சியில் ரசிகர்கள் திக்குமுக்காடி போவார்கள். ரசிகர்கள் மத்தியில் அவருக்கு அப்படி ஒரு கிரேஸ் இருக்கிறது.
கங்குவா படம் கதை உருவானபோது அவரின் வேடம் அழுத்தமாக இருந்ததாம். ஆனால், கதையில் சில மாற்றங்களை செய்து ஃபிளாஷ்பேக் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது போல் கதை மாறியதும் அவருக்கான முக்கியத்துவம் குறைந்துபோய்விட்டதாம். இதனால், சில காட்சிகளில் மட்டும் வருகிறாராம் திஷாபத்தானி.
இதையடுத்து ‘என்னை புக் பன்ணும்போது என்னவெல்லாம் சொல்லிட்டு இப்படி டம்மி ஆக்கிட்டாங்களே’ என புலம்பி வருகிறாராம் கவர்ச்சி கன்னி!...
இதையும் படிங்க: தலைவர் சொன்னதை ராகவா லாரன்ஸே கேட்கலயே!.. நெல்சனுக்கு கொடுத்த சரக்கு பார்ட்டி!…