
Cinema News
கார்த்திக்கு குடைச்சல் கொடுத்த இயக்குனர்… டப்பிங்கில் நடந்த களேபரம்… இப்படியெல்லாம் நடந்திருக்கா??
கார்த்தி நடிப்பில் உருவான “சர்தார்” திரைப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இத்திரைப்படத்தை பி.எஸ். மித்ரன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு “இரும்புத்திரை”, “ஹீரோ” போன்ற திரைப்படங்களை இயக்கியவர்.

PS Mithran
“சர்தார்” திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் சமீபத்தில் வெளியானது. இதில் கார்த்தி உளவாளியாக நடித்துள்ளதாக தெரியவருகிறது. அதுவும் கார்த்தி பல கெட்டப்களில் வருகிறார்.
பி.எஸ்.மித்ரன் இதற்கு முன் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் வித்தியாசமான கதையம்சத்தை கொண்டதாகும். அதே போல் “சர்தார்” திரைப்படமும் ரசிகர்களுக்கு மாபெரும் தீபாவளி விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு பிஸ்மி, “சர்தார்” திரைப்படம் குறித்த ஒரு தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

Karthi
அதாவது இன்னும் வெளிநாட்டு விநியோகஸ்தர்களுக்கு “சர்தார்” திரைப்படத்தின் கண்டென்ட் அனுப்பப்படவில்லையாம். படம் வெளியாவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே அனுப்பினால்தான் அங்கே தணிக்கை செய்துவிட்டு வெளியிட எளிதாக இருக்கும். இந்த தாமதத்திற்கு “சர்தார்” திரைப்படத்தின் இயக்குனர்தான் காரணம் என கூறுகிறார்களாம்.
மேலும் இது குறித்து பேசிய பிஸ்மி “கார்த்திக்கும் இயக்குனர் பி.எஸ்.மித்ரனுக்கும் படப்பிடிப்பு சமயத்தில் பல உரசல்கள் நடந்திருக்கிறது. குறிப்பாக டப்பிங் சமயத்தில் இருவருக்குள்ளும் ஜாஸ்தியாகவே உரசல் இருந்திருக்கிறது.

PS Mithran
இயக்குனரே இல்லாமல் கார்த்தி சில காட்சிகளில் டப்பிங் பேசியிருக்கிறார். அந்த காட்சிகள் இயக்குனருக்கு விருப்பம் இல்லாமல் போயிருக்கிறது. “இப்படி பேசலாமே”, “அப்படி பேசலாமே” என இயக்குனர் கூறியிருக்கிறார். இப்படி இவர்கள் இருவருக்குள்ளும் நடந்த பிரச்சனையில் சர்தார் திரைப்படத்தின் டப்பிங்கை முடிக்க 33 நாட்கள் ஆகியிருக்கிறது. இது தான் ஒரு வேளை தாமதத்திற்கு காரணமாக இருக்குமோ?” எனவும் கூறியுள்ளார்.
இதே போல் ஒரு காட்சியில் டப்பிங்கிற்கு 30 நபர்கள் வேண்டும் என கேட்டிருக்கிறார் இயக்குனர். தயாரிப்பு நிர்வாகம் 30 நபர்களை தயார் செய்து அழைத்து வந்திருக்கிறது. ஆனால் அவர்கள் வந்த நாள் அன்று இயக்குனர் அவர்களை பயன்படுத்தவே இல்லையாம். ஆனால் அன்றைக்கான சம்பளம் அவர்களுக்கு அளிக்கப்பட்டுவிட்டது.

Karthi
திடீரென்று இன்னொரு நாள் அந்த 30 நபர்கள் வேண்டும் என கேட்டிருக்கிறார் இயக்குனர். ஆனால் தயாரிப்பு நிர்வாகம் 20 நபர்களை மட்டுமே அழைத்து வந்திருக்கிறது. இதனால் கடும் கோபத்திற்கு ஆளானாராம் இயக்குனர். இந்த சம்பவத்தையும் பத்திரிக்கையாளர் பிஸ்மி பகிர்ந்துகொண்டுள்ளார்.