Connect with us
saravana store

நஷ்ட ஈடு கொடுங்க விஜய் சேதுபதி!…. இது என்னடா இப்படி ஒரு சோதனை!….

vijay-sethupathi

Cinema News

நஷ்ட ஈடு கொடுங்க விஜய் சேதுபதி!…. இது என்னடா இப்படி ஒரு சோதனை!….

மறைந்த இயக்குனர் ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் லாபம். இப்படம் முடிவடையும் நேரத்தில் ஜனநாதன் இறந்துபோனார்.

பல படங்களில் நடித்துக்கொண்டே கிடைக்கும் நேரத்தில் இப்படத்தில் நடித்தார் விஜய் சேதுபதி. எனவே, வெவ்வேறு தோற்றங்களில் இப்படத்தில் வருவார். எனவே, அந்த காட்சிகள் கதையில் ஒட்டவே இல்லை. மேலும், அமெச்சூரான காட்சிகள், சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை என இப்படம் ரசிகர்களை கவரவில்லை. எனவே, இப்படம் தோல்விப்படமாக அமைந்தது.

laabam

இப்படத்திற்கு விஜய் சேதுபதியும் ஒரு தயாரிப்பாளர் ஆவார். எனவே, இப்படத்தால் அவருக்கு ரூ.10 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. ஒருபக்கம் இப்படத்தை வெளியிட்டதால் நஷ்டம் அடைந்த வினியோகஸ்தர்கள் தங்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என விஜய் சேதுபதியை நெருக்க துவங்கியுள்ளனர்.

vijay-sethupathy

அவரை நேரில் சந்திக்க முடியாததால் சினிமாத்துறையினரின் பல்வேறு வாட்ஸ் அப் குழுவில் இது தொடர்பாக செய்திகளை பதிவிட்டு வருகின்றனராம். விஜய் சேதுபதி இதற்கு ஒரு தீர்வை காணவில்லை எனில், அவரின் வீட்டின் முன்பு சென்று ஆர்ப்பாட்டம் நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க: மாநாடு ரிலீஸ் ஆகாம போனதுக்கு இதுதான் காரணமா? உண்மையை மறைத்த தயாரிப்பாளர்…

விஜய் சேதுபதி முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர். திரையுலகினருக்கு பல உதவிகளை செய்து வருபவர். சமீபத்தில் கூட திரைப்பட தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் பணிக்கு ரூ.1 கோடி நிதியுதவி அளித்தார். எனவே, லாபம் படம் நஷ்டம் தொடர்பான பிரச்சனைக்கு அவர் விரைவில் தீர்வு காண்பார் என நம்பப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற @ Google News கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள். Also Follow @ YouTube, Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram
Continue Reading
To Top