Cinema News
விஜயை ஸ்கெட்ச் போட்டு தூக்க பிளானா?.. உதயநிதியை போர் மேகம் போல் சூழ்ந்த விநியோகஸ்தர்கள்..
அஜித்தின் “துணிவு” திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு 11 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இத்திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிட உள்ளது. அதே போல் விஜய்யின் “துணிவு” திரைப்படமும் 11 ஆம் தேதி வெளிவருவதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து “துணிவு” திரைப்படத்தின் முதல் காட்சி நள்ளிரவு 1 மணிக்கு திரையிடப்படுவதாகவும், “வாரிசு” படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படுவதாகவும் சில செய்திகள் வெளிவந்தன.
இதனிடையே நேற்று தமிழகம் முழுவதிலும் உள்ள விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்கள் பலரும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தில் குவிந்துவிட்டார்களாம். அங்கே “வாரிசு”, “துணிவு” ஆகிய இரண்டு திரைப்படங்களில் எந்த படத்தை 1 மணி ஷோவுக்கு திரையிடுவது எனவும், எந்த படத்தை 4 மணி ஷோவுக்கு திரையிடுவது எனவும் பேச்சு வார்த்தைகள் நடந்து வந்ததாம்.
இதில் “துணிவு” திரைப்படத்தின் முதல் ஷோவை 1 மணி காட்சிக்கு திரையிட ரெட் ஜெயன்ட் தரப்பு முடிவெடுத்திருந்ததாம். ஆனால் விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் இரண்டு திரைப்படங்களின் முதல் ஷோவும் ஒரே நேரத்தில் திரையிட வேண்டும் என கூறினார்களாம். இவ்வாறு இரு தரப்புக்கும் இடையே மிகப்பெரிய பேச்சு வார்த்தைகள் நடந்ததாம்.
இறுதியில் “வாரிசு”, “துணிவு” ஆகிய இரண்டு திரைப்படங்களையுமே 4 மணிக்கு முதல் காட்சியாக திரையிடலாம் என ஒரு முடிவுக்கு வந்தார்களாம். இந்த பேச்சுவார்த்தைகள் எல்லாம் முடிந்து அவர்கள் சென்ற பிறகு, இந்த முடிவை கேள்விப்பட்ட போனி கபூர் உதயநிதி ஸ்டாலினிடம் “துணிவு திரைப்படத்தின் முதல் காட்சியை 1 மணிக்கு திரையிட்டே ஆகவேண்டும்” என முடிவெடுத்து அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுவிட்டாராம். இத்தகவலை வலைப்பேச்சு வீடியோவில் மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன் பகிர்ந்துகொண்டார்.
இதையும் படிங்க: ஒரு சூப்பர் ஸ்டாரை இப்படி திட்டிட்டோமே.. “என்ன இருந்தாலும் அப்படி பண்ணிருக்க கூடாது”… ஃபீலிங்ஸ் ஆன பாலச்சந்தர்…
அதனை தொடர்ந்து பேசிய மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி “விஜய்யின் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் முதல் நாள் வசூல் மிக அபாரமாக இருக்கும். வாரிசு படமும் அப்படிப்பட்ட ஒரு சாதனையை புரிய வேண்டும் என்பதுதான் விஜய்யின் ஆசை. அப்படி ஒரு சாதனை நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இவ்வளவு பெரிய அரசியல் நடக்கிறது. கிட்டத்தட்ட விஜய்யை ஒழிப்பதற்கான சதிதான் இதெல்லாம்” என பிஸ்மி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.