Connect with us
rajini

Cinema History

ரஜினிக்கு ரெட் கார்டு.. வேட்டிய மடிச்சி கட்டி இறங்கிய தயாரிப்பாளர்.. செம தில்லுதான்!…

கடந்த சில நாட்களாக திரையுலகை சேர்ந்த சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை எனக்கூறி ரெட் கார்ட் விதிப்போம் என தயாரிப்பாளர் பேசி வருகிறார்கள். ஆனால், ரஜினிக்கே ஒரு கட்டத்தில் ரெட் கார்ட் விதிக்கப்பட்ட கதையைத்தான் இங்கே பார்க்க போகிறோம்.

90களில் அசைக்கமுடியாத நடிகராக, சூப்பர்ஸ்டாராக இருந்தவர் ரஜினி. ஆனால், இவர் அதிக சம்பளம் வாங்குவதாக கூறி வினியோகஸ்தர்கள் எல்லாம் சேர்ந்து அவரின் படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் என கூறிவிட்டனர். இது திரையுலகினருக்கே அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில், இப்போது விஜய் போல 90களில் மாஸ் நடிகராக, மிகவும் பிஸியான நடிகராக ரஜினி இருந்த காலம் அது. அவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர் வரிசையில் நின்ற காலம் அது.

rajini

ரஜினிக்கு ரெட் கார்ட் என்கிற விஷயம் விஜய வாகினி ஸ்டுடியோ நிறுவனர் நாகி ரெட்டிக்கு தெரியவர ‘நான் ரஜினியை வைத்து படம் எடுக்கிறேன். யார் என்ன செய்கிறார்கள் பார்ப்போம்’ என களம் இறங்கினார். பி.வாசு இயக்குனர் என முடிவு செய்து ஒரு கதை உருவானது. அதுதான் உழைப்பாளி திரைப்படம். இது வினியோகஸ்தர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ‘சரி படம் முடியட்டும். பார்த்து கொள்வோம்’ என காத்திருந்தார்கள்.

ulaipali

அந்த படம் முடிந்ததும் எந்த வினியோகஸ்தரிடமும் செல்லாமல் சொந்தமாக ரிலீஸ் செய்ய முடிவெடுத்தார் நாகி ரெட்டி. அதோடு, ரஜினிக்கு சம்பளமாக எதுவும் கொடுக்காமல் வட ஆற்காடு, தென் ஆற்காடு, செங்கல்பட்டு ஆகிய மூன்று ஏரியாக்களையும் அவரிடம் கொடுத்துவிட்டார். அது அன்றைய ரஜினியின் சம்பளத்தை விட பல மடங்கு அதிகம். இது வினியோகஸ்தர்களுக்கு அதிக கோபத்தை ஏற்படுத்திவிட்டது.

ulaipali

ஒருகட்டத்தில் ஒரு சின்ன ஈகோ பிரச்சனைக்கு எதற்காக சண்டை.. படம் ரிலீஸாகி ரசிகர்கள் பார்க்க வேண்டும் என யோசித்த ரஜினி சென்னை அண்ணாசாலையில் உள்ள வினியோகஸ்தர்களின் அலுவலகத்திற்கு அவரே நேரில் சென்றார். அப்போது வினியோகஸ்தர்களின் தலைவராக இருந்த சிந்தாமணி முருகேசனிடம் பேசி இந்த பிரச்சனைக்கு சுமூக முடிவு எட்டினார். ரஜினியே நேரில் போய் பேசியதில் எல்லா பிரச்சனையும் முடிவுக்கு வந்தது.

உழைப்பாளி படமும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்து தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை கொடுத்தது.

இதையும் படிங்க: 5 முதலமைச்சர்களோட நடிச்ச ஒரே நடிகை அவங்க மட்டும்தான்!.. யாரு தெரியுமா?

google news
Continue Reading

More in Cinema History

To Top