பட்டய கிளப்பும் ஆர்.ஆர்.ஆர். படக்குழு... கடுப்பில் வலிமை பட வினியோகஸ்தர்கள்....

by சிவா |
rrr
X

பொதுவாக தமிழ் சினிமா நடிகர்களில் பலர் தாங்கள் நடிக்கும் படங்களின் புரமோஷன் விழாக்களில் பெரிதாக கலந்து கொள்ள மாட்டார்கள். நடிகர் அஜித் இதற்கு பெரிய உதாரணம். விஜய், சிம்பு, தனுஷ், சூர்யா உள்ளிட்ட சில நடிகர்கள் இது போன்ற விழாக்களில் கலந்து கொள்கிறார்கள்.

ஆனால், ஆந்திரா பக்கம் சென்றால் தெலுங்கு சினிமா நடிகர்கள் இதில் இறங்கி அடிக்கின்றனர். அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் வெளியானது. எனவே, சென்னை, ஹைதராபாத், மும்பை, கேரளா, பெங்களூர் என அனைத்து ஊருக்கும் அல்லு அர்ஜூன் உள்ளிட்ட படக்குழு நேரில் சென்று பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்களை நேரில் சந்தித்து அப்படத்தை விளம்பரம் செய்தனர். அதன் காரணமாக புஷ்பா திரைப்படம் நல்ல வசூலை பெற்றது.

pushpa

அதேபோல், பாகுபலி பட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்து பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் புரமோஷனை அப்படக்குழு சிறப்பாக செய்து வருகிறது. புஷ்பா படக்குழு போலவே அந்த படக்குழுவும் அனைத்து ஊருக்கும் சென்று புரமோஷன் செய்து வருகிறது.

rrr

நேற்று சென்னையில் இந்த விழா நடைபெற்றது. இதில், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ராஜமவுலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக சிவகார்த்திகேயன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். எனவே, இந்த திரைப்படமும் சிறப்பு கவனத்தை பெற்றுள்ளது. இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

valimai

ஆனால், வலிமை படம் இன்னும் 2 வாரத்தில் வெளியாகவுள்ள நிலையில் இப்படம் தொடர்பான எந்த புரமோஷனும் இதுவரை நடைபெறவில்லை. அவ்வளவு ஏன்?. இப்படத்தின் டிரெய்லர் வீடியோ கூட இன்னும் வெளியாகவில்லை. இப்படத்திற்கு எந்த புரமோஷனும் வேண்டாம் என அஜித் கருதுவதாக தெரிகிறது. இது அஜித் ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பது போலவே வலிமை படத்தை வாங்கி வியாபாரம் செய்யும் வினியோகஸ்தர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஆனாலும், சினிமா வட்டாரத்தின் பெரிய மனிதர்கள் இப்படத்தை வினியோகம் செய்வதால் எப்படி சொல்வது என தெரியாமல் வாய் மூடி இருக்கிறார்களாம் வினியோகஸ்தர்கள்...

Next Story