Connect with us
saravana store

இந்த குடும்பத்துக்கும் முதல் திருமணத்திற்கும் ராசியே இல்லை.. எல்லாமே டைவர்ஸ் தான்!!

Uncategorized

இந்த குடும்பத்துக்கும் முதல் திருமணத்திற்கும் ராசியே இல்லை.. எல்லாமே டைவர்ஸ் தான்!!

கடந்த சிலதினங்களுக்கு முன் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, சமந்தா விவாகரத்து செய்திதான் அனைத்து நாளிதழ்களிலும் தலைப்பு செய்தியானது. மற்ற செய்திகளை விட இந்த செய்திக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து அனைத்து பத்திரிக்கைகளும் இதை கவர் செய்திருந்தன.

விவாகரத்துக்கு ஜீவானம்சமாக நாகசைதன்யா கொடுத்த 200கோடி ரூபாயையும் வாங்க மறுத்துவிட்டார் சமந்தா. நாக சைதன்யாவிற்கு முதல் திருமணம் தோல்வியில் முடிந்ததால் ரசிகர்கள் கவலையில் இருந்தனர். இதில் கவலைப்பட ஒன்றுமே இல்லை என்னும் அளவிற்கு தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

samantha

நாகார்ஜுனாவின் தந்தை அக்கினேனி நாகேஸ்வர ராவ் மீதும் அவரது படத்தின்மீதும் தெலுங்குத் திரையுலகம் மிகுந்த மரியாதை வைத்துள்ளது. இவரது மகன் நாகார்ஜுனா பிரபல தயாரிப்பாளர் ராமநாயுடுவின் மகளும், நடிகர் வெங்கடேஷின் சகோதரியான லட்சுமியை முதலில் திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு பிறந்த குழந்தைதான் நாகசைதன்யா.

இதையும் படிங்க: திடீரென திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை…. சோகத்தில் ரசிகர்கள்….

பின்னர் அமலா மீது ஏற்பட்ட காதலால் லட்சுமியை விவாகரத்து செய்துவிட்டு அமலாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். தற்போது அவரது மூத்த மகன் நாக சைதன்யாவிற்கும் முதல் திருமணம் தோல்வியில் முடிந்துள்ளது. இவரது இரண்டாவது மகன் அகிலுக்கும், ஷ்ரியா பூபால் என்பவருக்கும் சில வருடங்களுக்குமுன் நிச்சயதார்த்தம் நடந்தது.

samantha

ஆனால், திருமணம் செய்யாமலே ரத்து செய்துவிட்டனர். நாகார்ஜுனாவின் சகோதரி மகன் சுமந்த்க்கும் நடிகை கீர்த்தி ரெட்டிக்கும் திருமணம் நடந்தது. ஆனால், இரண்டு வருடத்திலே விவாகரத்து பெற்றனர். இதேபோல், சுமந்த சகோதரி சுப்ரியாவிற்கும், தெலுங்கில் இஷ்டம் என்ற படத்தில் நாயகனாக நடித்த சரண் டோட்லா என்பவருக்கும் திருமணம் நடந்தது.

ஆனால், இவர்கள் திருமணமும் சில வருடத்திலே விவாகரத்தில் சென்று முடிந்தது. இந்த குடும்பத்துக்கும், முதல் திருமணத்திற்கும் அப்படி என்ன பந்தமோ, எல்லாம் தோல்வியிலேயே முடிகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற @ Google News கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள். Also Follow @ YouTube, Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram
Continue Reading
To Top