
Entertainment News
எட்டுமடிப்பு சேலையில் எட்டிப் பார்க்கும் கொள்ளையழகு…வைரலாகும் திவ்யபாரதியின் புகைப்படம்
புதுமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘பேச்சுலர்’. இந்த படத்தின் மூலம் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானார் நடிகை திவ்யபாரதி. இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.
அறிமுகப்படத்திலேயே மேக்கப்பில்லாத திவ்யபாரதி அவரது கதாபாத்திரத்தில் அழுத்தமாய் நடித்திருந்தார். முதல் படத்திலேயே திவ்ய பாரதிக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்.திவ்ய பாரதிக்கு இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.
நடித்த முதல் படத்திலயே ரசிகர்களிம் விரும்பும் நாயகியாக வலம் வந்தார். ஆனாலும் சொல்லிக் கொள்ளும் படியான படவாய்ப்புகள் வராததால் சமூக வலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சியாக புகைப்படங்களை பகிர்ந்து அதன் மூலம் வாய்ப்புகளை தேடி வருகிறார்.
இந்த நிலையில் மஞ்சள் நிற சேலையில் அழகாக போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். எப்பொழுதும் கவர்ச்சியான புகைப்படங்களையே பதிவிட்டு வரும் இவர் இந்த மாதிரி புகைப்படத்தை பகிர்ந்தது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது. எனினும் இந்த புகைப்படத்திலும் கவர்ச்சி கொஞ்சம் எட்டி பார்க்க தான் செய்கிறது.