இதுல நீதான் குயினு!.. செம ஸ்டைலா கெத்தா போஸ் கொடுக்கும் டிடி.....
விஜய் டிவியின் எவர்க்ரீன் தொகுப்பாளினியாக இருப்பவர் திவ்யதர்ஷினி எனும் டிடி. இவர் நடத்திய ‘காபி வித் டிடி’ நிகழ்ச்சியில் பிரபலங்களிடம் ஜாலியாக பேசி அவர்களிடம் பதில்களை வாங்கும் அழகுக்கே இவருக்கு ரசிகர்கள் உருவானார்கள். பிரபலங்கள் பதில் சொல்ல விரும்பாத கேள்விகளுக்கு கூட பதிலை லாவகமாக பெற்றுவிடுவார்.
ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன்பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2017ம் ஆண்டு இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்பின் டிடி வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. நளதயமந்தி, விசில், பவர் பாண்டி உட்பட சில படங்களில் டிடி நடித்துள்ளார்.
மேலும், ஊர் சுற்றுவதில் ஆர்வமுடைய டிடி அவ்வபோது வெளிநாடுகள் சென்று அது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். சமீபகாலமக கொஞ்சம் கவர்ச்சியாகவும் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
இதையும் படிங்க: இப்பதான் தெரியுது சூர்யா ஏன் விழந்தார்னு!…கையில்லாத ஜாக்கெட்டில் சூடேத்திய நடிகை….
இந்நிலையில், செம ஸ்டைலான உடை மற்றும் கூலிங் கிளாஸ் என கெத்தாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.