Connect with us

இப்படி பண்ணிட்டியே டிடி…. ஆனாலும் மொத்த அழகும் அங்கதான் இருக்கு…..

Cinema News

இப்படி பண்ணிட்டியே டிடி…. ஆனாலும் மொத்த அழகும் அங்கதான் இருக்கு…..

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருப்பவர் திவ்யதர்ஷினி. இவரை சுருக்கமாக டிடி என சின்னத்திரை வட்டாரத்தில் அழைப்பார்கள். இவர் நடத்திய ‘காபி வித் டிடி’ நிகழ்ச்சியில் பிரபலங்களிடம் ஜாலியாக பேசி அவர்களிடம் பதில்களை வாங்கும் அழகுக்கே இவருக்கு ரசிகர்கள் உருவானார்கள். பதில் சொல்ல விரும்பாத கேள்விகளுக்கு கூட பதிலை லாவகமாக பெற்றுவிடுவார் டிடி. எனவே, பிரபலங்களுக்கும் இவரை மிகவும் பிடிக்கும்.

கடந்த 2014ல் இவரது நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன்பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2017ம் ஆண்டு இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்பின் டிடி வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. நளதயமந்தி, விசில், பவர் பாண்டி உட்பட சில படங்களில் டிடி நடித்துள்ளார்.

divya

மேலும், ஊர் சுற்றுவதில் ஆர்வமுடைய டிடி அவ்வபோது வெளிநாடுகள் சென்று அது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். சமீபகாலமக கொஞ்சம் கவர்ச்சியாகவும் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வந்தார்.

divya

இந்நிலையில், திடீரென புடவையில் அவருக்கு உண்டான ஸ்பெஷல் சிரிப்புடன் போஸ் கொடுத்து ரசிகர்களுகு ஷாக் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: கும்முன்னு இருக்குது பாப்பா!… ராஷ்மிகா மந்தனாவை மெய் மறந்து பார்க்கும் ரசிகர்கள்…

divya

ஆனாலும், ரசிகர்கள் அவரின் அழகை ரசிக்காமல் இல்லை. அவரின் மொத்த அழகும் அவரின் சிரிப்பில் இருப்பதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

dd

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top