ப்ப்பா என்னா பொண்ணுடா!.. ஓவர் டோஸ் அழகில் உசுர வாங்கும் டிடி!.. வைரல் புகைப்படங்கள்…
டிவி ஆங்கர்களும் நடிகைகள் ரேஞ்சுக்கு பிரபலமாகும் காலம் இது. விஜய் டிவியில் ஆங்கர்களில் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானவர் திவ்ய தர்ஷினி. இவரை டிடி என சுருக்கமாக அழைப்பார்கள்.
பல வருடங்களாக இவர் விஜய் டிவியில் ஆங்கராக இருந்து வருகிறார். இவர் ஆங்கராக பணிபுரிந்த நிகழ்ச்சிகள் எல்லாமே சூப்பர் ஹிட் ஆனது. குறிப்பாக காபி வித் டிடி நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றது.
திரை பிரபலங்களை பேட்டியெடுத்து அவர்கள் பதில் சொல்ல விரும்பாத கேள்விகளுக்கும் பதிலை வாங்கி விடுவார். நயன்தாரா போன்ற பெரிய நடிகைகள் கூட டிடியிடம் மிகவும் ஓப்பனாக பேசுவார்கள்
டிவி ஆங்கர் மட்டுமில்லாமல் தொலைக்காட்சி சீரியல் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பவர் பாண்டி, காபி வித் காதல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
மேலும், டிவி நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் சினிமா தொடர்பான பல நிகழ்ச்சிகளிலும் இவர் ஆங்கராக இருந்துள்ளார். சமீபத்தில் நடந்த பொன்னியின் செல்வன் 2 ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியிலும் டிடி ஆங்கராக இருந்தார்.
சமூகவலைத்தளங்களில் டிடி பகிரும் புகைப்படங்கள் எப்போதும் லைக்ஸ்களை குவிக்கும். அந்த வகையில், வெள்ளை நிற புடவை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.