நானும் அந்த பிரச்சனையை சந்தித்தேன்... எதற்கும் துணிந்தவன் பட நடிகை ஓப்பன் டாக்....!
சினிமாவில் மட்டுமல்லாமல் சமூகத்திலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நாள்தோறும் நடந்து கொண்டு தான் உள்ளன. இந்நிலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை சாடும் விதமாக சமீபத்தில் வெளியான படம் தான் எதற்கும் துணிந்தவன். இந்நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகையே தான் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் தான் எதற்கும் துணிந்தவன். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், திவ்யா, வினய், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி உட்பட பலர் நடித்துள்ளனர்.
இதில் நாயகி பிரியங்கா அருள் மோகனின் தோழியாக நடித்திருப்பவர் தான் திவ்யா. இவர் செய்தி வாசிப்பாளராக தன் கெரியரை தொடங்கி தற்போது படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய திவ்யா கூறியதாவது, "காலேஜ் படிக்கும்போது ஒரு ரசிகையாக சூர்யா சாரை பார்த்துள்ளேன். பிறகு தொகுப்பாளராக அவரை நான் சந்தித்தேன்.
இந்நிலையில் தற்போது அவருடன் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. படத்தின் ஷூட்டிங் ரொம்ப ஜாலியாக இருந்தது. எல்லா பெண்களுமே ஏதோ ஒரு வகையில் பாலியல் ரீதியான பிரச்சனைகளை சந்தித்து இருப்பார்கள். அதை நானும் சந்தித்துள்ளேன். ஆனால் நான் அதை தைரியமாக கடந்து வந்திருக்கிறேன்.
யாரெல்லாம் தனக்கு நடக்கும் அத்துமீறல்களை வெளியே சொல்லாமல் இருக்கிறார்களோ அவர்களுக்குத் தான் மீண்டும் அத்துமீறல்கள் நடக்கிறது. சூர்யா சார் மிகவும் நல்ல மனிதர். திரைக்கு பின்னால் அவ்வளவு நல்ல விஷயங்களை செய்து வருகிறார். சமுதாயத்தில் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் குரல் கொடுக்கிறார்" என கூறியுள்ளார்.