நீங்கலாம் விஜய் டிக்னிட்டி பத்தி பேசலாமா? ஒரே மேடை பேச்சால் செம அடி வாங்கும் சத்யராஜ் மகள்… 

by Akhilan |   ( Updated:2025-04-15 04:25:53  )
vijay
X

divya sathyaraj vijay

Vijay: திமுகவில் இணைந்த நடிகர் சத்யராஜின் மகள் சமீபத்தில் மேடையில் பேசும் போது விஜயின் அரசியல் நகர்வை குறித்து விமர்சிக்காமல் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி இருப்பது தற்போது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் தன்னுடைய கேரியரை தூக்கி எறிந்து விட்டு அரசியலுக்குள் கால் பதிக்க இருக்கிறார். அவருடைய அரசியல் கட்சி தொடங்கப்பட்டு அதற்கான வேலைகள் முழு வீச்சாக நடந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.

தற்போது சினிமாவை விட்டு அரசியலுக்குள் வர இருக்கும் விஜய் பொதுவெளியில் அதிகமாக தலை காட்டிக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் சமூகப் பிரச்சினைகளிலும் தன்னுடைய கருத்தை முன்வைத்துக் கொண்டிருப்பது அவருக்கான ஆதரவு மக்களிடம் அதிகரித்து வருகிறது.

இந்த நேரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்கு தன்னுடைய சகாக்களுடன் நடிகை திரிஷாவையும் அழைத்துக் கொண்டு தனியாக விமானத்தில் சென்றது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து விஜய் மற்றும் திரிஷா என யாருமே வாய் திறக்காமல் இருந்தனர்.

ஆனால் இந்த விஷயம் அரசியல் கூட்டத்தில் மிகப்பெரிய சலசலப்பை உருவாக்கியது. அந்த விஷயம் நடந்து பல மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் தற்போது திமுக கட்சியில் இணைந்திருக்கும் நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா தன்னுடைய மேடைப்பேச்சில் மீண்டும் இது குறித்து நாகரீகம் இல்லாமல் விஜயை விமர்சித்திருப்பது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

அவர் பேசுகையில், நான் துணை முதல்வர் உதயநிதி பற்றி பேசுவதில் பெருமைபடுகிறேன். அவர் ரொம்ப நேர்மையானவர். ஏசி கேரவனில் உட்கார்ந்து கொண்டு பிரண்டு கூட பிரண்டு கல்யாணத்துக்கு போற போலி அரசியல்வாதி இல்லை. அவர் மழை வந்தாலும் இடி இடிச்சாலும் இறங்கி வேலை செய்வார்.

அவரை எதிர்த்து யார் நின்றாலும் டெபாசிட் போய்டும். அவர் அசைக்க முடியாத ஹீரோ எனப் பேசி இருக்கிறார். இது வைரலான நிலையில், பிரபல திரை விமர்சகர் ப்ளூசட்டை மாறன், உங்களுக்கு மேடைப்பேச்சு சுத்தமாக வரவில்லை. அதை கற்றுக்கொண்டு மைக் முன்பு வாருங்கள்.

விஜய்யின் அரசியல் மீது விமர்சனம் வையுங்கள். அவர் யாருடன் விமானத்தில் சென்றார். யாருடைய கல்யாணத்திற்கு சென்றார் என சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போல பேசுவது எதற்கு? என விமர்சித்துள்ளார்.

Next Story