திருமணம் செய்து கொள்வதாக திவ்யபாரதி ஏமாற்றிவிட்டார்... விரிவான தகவல் இதோ...

கொடைக்கானலை சேர்ந்த ஆனந்தராஜ் என்ற யூடியூபர் கவிதை தொடர்பான வீடியோக்களை பதிவிட்டு வந்துளளார். திடீரென அவர் தனது வீடியோ ஒன்றில் ஒரு நடிகையை நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஒருவரின் மூலம் சீரியல் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்த திவ்யபாரதியை தொடர்பு கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆனந்தராஜ் திவ்யபாரதியின் வீடியோக்களை படமாக்கி, பின்னணியில் அவரது கவிதைகளை விவரித்தார். காலப்போக்கில் அவர்களின் நட்பு காதலாக மாறியதாம். மேலும், யூடியூபர் நடிகையை திருமணம் செய்து கொள்ள தனது விருப்பத்தை பகிர்ந்து கொண்தோடு தனது பெற்றோரிடமிருந்தும் ஒப்புதலையும் பெற்றுள்ளார்.
இதனை தொடர்ந்து, திவ்யபாரதி ஆனந்தராஜை விரைவில் திருமணம் செய்து கொள்வதாக கூறி மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார். காதல் வசியப்பட்ட ஆனந்தராஜ் எப்போது திருமணம் என்ற தலைப்பை பற்றி பேசினாலும் அந்த திருமண தலைப்பை மறுத்துவிட்டு ஆனந்தராஜிடம் சண்டை போட்டுக்கொண்டு அவனிடம் சில நாட்கள் பேசாமல் போய்விடுவாராம்.
சமீபத்தில், ஆனந்தராஜை தொடர்பு கொண்டு தனக்கு தீவிர அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் ஒன்பது லட்சம் தேவை என்றும் திவ்யபாரதி கூறியதும் காதலன் ஆனந்தராஜ் அந்தத் தொகையை ஏற்பாடு செய்து, அதுமட்டுமல்லாமல் திவ்யபாரதி தனக்கு வரப்போகும் மனைவியாகப் போகிறாள் என்ற எண்ணத்தில் எட்டு சவரன் தங்கத்தையும் சேர்த்து கொடுத்துள்ளார்.
இதையும் படிங்களேன் - மீண்டும் அந்த விஷயத்தை தூசிதட்டும் தனுஷ்….சூப்பர்ஸ்டார் கொடுத்த மரண அடி ஞாபகமிருக்கா சார்.?!
இதனை அனைத்தும் செய்த பிறகும், திவ்யபாரதி அந்த நபரை திருமணம் செய்ய்ஞ் மறுத்துள்ளார். இந்நிலையில், திவ்யபாரதி குறித்து அவரது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கோம்பையில் ஆனந்தராஜ் விசாரணை நடத்தியபோது, திவ்யபாரதிக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தற்போது, திவ்யபாரதி தன்னை காதலிப்பது போல் நடித்து ஏமாற்றி சுமார் 30 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஆனந்தராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.