நடிகைகளுக்கே ஃடப் கொடுக்கும் டிடி: சிவப்பு உடையில் வைரலாகும் புகைப்படங்கள்..

by adminram |   ( Updated:2021-10-08 10:41:10  )
நடிகைகளுக்கே ஃடப் கொடுக்கும் டிடி: சிவப்பு உடையில் வைரலாகும் புகைப்படங்கள்..
X

தமிழ் தொலைக் காட்சி பார்க்கும் பலருக்கும் டிடி (திவ்ய தர்ஷினி) என்ற உடன் புன்சிரிப்பும், லட்சணம் நிறைந்த முகம் தான் கண் முன் வரும். பல ஆண்டுகளாக விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் டிடி, சிவப்பு நிற உடையில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார். அதில் பலருக்கும் மிகவும் பிடித்தமான நிகழ்ச்சி என்றால் காஃபி வித் டிடி நிகழ்ச்சி தான். அந்த அளவிற்குத் தனது பேச்சுத் திறமையாலும், சிரிப்பாலும் மக்கள் மனதைக் கவர்ந்து வருகிறார். சினிமா வாய்ப்பிற்காக அவ்வப்போது பல போட்டோ சூட்களை நடத்தி இணையத்தில் வெளியிட்டு வருகிறார். மேலும், திரைப்படத்தில் நல்ல வலுவான கதாபாத்திரத்திற்காகவும் காத்துக் கொண்டிருக்கிறார் என்றே கூறலாம்.

அதிலும், குறிப்பாக டிடியின் இன்ஸ்டா பதிவிற்குப் பலரும் லைக்ஸ்களை தெரிக்கவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகைகளுக்கே ஃடப் கொடுக்கும் வகையில் டிடி சிவப்பு நிற லெஹங்காவில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணைய உலகை ஆக்கிரமித்துள்ளது. அந்த புகைப்படத்திற்குப் பலரும் ஹார்ட் சிம்பளை கமெண்டுகளாக பதிவிட்டு வருகின்றனர்.

Next Story