OTT Release: தீபாவளி ரிலீஸ் படங்களெல்லாம் எந்த ஓடிடியில் ரிலீஸ் தெரியுமா?!.. வாங்க பார்ப்போம்!...
OTT Release: முன்பெல்லாம் புதிய திரைப்படங்களை தியேட்டரில் மட்டுமே சென்று பார்க்க முடியும். இப்போது ஓடிடி நிறுவனங்கள் வந்துவிட்டதால் வீட்டிலிருந்தே பார்க்க முடியும். சில படங்கள் தியேட்டரில் வெளியாகாமல் நேரிடையாக அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களில் வெளியாகும்.
இதை ப்ரீமியர் என சொல்வார்கள். அதேநேரம், ஒரு புது படம் தியேட்டரில் வெளியாகி 4 வாரங்கள் கழித்து ஓடிடி தளங்களில் வெளியாவதே பெரும்பலான நடைமுறையாகும். இதை தமிழ் சினிமாவில் முதலில் முயன்று பார்த்தவர் கமல்ஹாசன்தான். விஸ்வரூபத்தை தியேட்டர் மற்றும் ஓடிடி என இரண்டிலும் வெளியிட திட்டமிட்டார்.
இதையும் படிங்க: Delhi Ganesh: பிரதீப் ரெங்கநாதன் செஞ்ச துரோகம்.. வருத்தப்பட்டு பேசிய டெல்லி கணேஷ்
அதற்கு தியேட்டர் அதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கமல் அதை செய்யவில்லை. ஆனால், ஒரு கட்டத்தில் ஓடிடி வந்துவிட்டது. அதை யாராலும் தடுக்க முடியவில்லை. அதோடு, புதிய படங்களை ஒரு பெரிய தொகை கொடுத்து ஓடிடி நிறுவனங்கள் வாங்க துவங்கியதால் சினிமா வியாபாரத்தின் ஒரு முக்கிய பங்காக ஓடிடி தளங்கள் மாறியது.
ஆனால், சில படங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு இல்லாமல் போனதால் ஒடிடி நிறுவனங்கள் அதிக விலை கொடுப்பதை நிறுத்திவிட்டன. ஆனாலும், வந்த ரேட்டுக்கு படங்களை தள்ளி விட்டுக்கொண்டிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையும் ஓடிடி தளங்களில் புதிய படங்களும், வெப் சீரியஸ்களும் வெளியாகி வருகிறது.
தீபாவளிக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் படமும், துல்கர் சல்மான் நடிப்பில் லக்கி பாஸ்கர் படமும், ஜெயம் ரவி நடிப்பில் பிரதர் படமும், கவினின் நடிப்பில் பிளடி பெக்கர் படமும் என மொத்தம் 4 படங்கள் வெளியானது. இதில், அமரன் படமும், லக்கி பாஸ்கர் படமும் ஹிட் அடித்திருக்கிறது.
இந்நிலையில், அமரனும், லக்கி பாஸ்கர் படங்கள் நெட்பிளிக்ஸ் தளத்திலும், பிளடி பெக்கர் திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவிலும், பிரதர் படம் ஜீ5 தளத்திலும் வெளியாகவுள்ளது. அக்டோபர் 31ம் தேதி இந்த திரைப்படங்கள் தியேட்டரில் வெளியானதால் டிசம்பர் 29ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: Kanguva: கங்குவா அட்வான்ஸ் புக்கிங்குக்கு வந்த சிக்கல்!. எப்பா 2 ஆயிரம் கோடி பாத்து பண்ணுங்கப்பா!..