விஜய்யை தன் கைக்குள்ளேயே வைத்திருக்க நினைக்கும் அரசியல் கட்சி?? ஓஹோ இதுதான் விஷயமா!!
விஜய் பல ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வருவதற்கான பேச்சுக்கள் அடிபட்டன. மேலும் அதற்கான முயற்சியாக தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றியதாக கூறப்பட்டது.
சமீபத்தில் இரண்டு முறை தனது மாவட்ட நிர்வாகிகளை சந்தித்துள்ளார் விஜய். அந்த சந்திப்பில் விஜய்யின் அரசியல் நுழைவு குறித்துதான் விவாதிக்கப்பட்டதாக ஒரு தகவல் வெளிவந்தது. அதே போல் சில நாட்களுக்கு முன்பு பகுத்தறிவு இயக்கத்தைச் சேர்ந்த ஒரு மூத்த அரசியல்வாதியை விஜய் தனது வீட்டிற்கே அழைத்து வந்து மணிக்கணக்காய் தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதித்ததாகவும் கூறப்பட்டது. இது போன்ற தகவல்களால் விஜய் விரைவில் அரசியலுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் திமுக விஜய்யை தனது கைக்குள் வைத்திருக்க முயற்சி செய்வதாக பிரபல மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி ஒரு பேட்டியில் தனது கருத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது சன் பிக்சர்ஸ் விஜய்யை மிகப்பெரிய நடிகராக பில்ட் அப் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்களாம். திமுக குடும்பத்தில் ஒருவருடைய நிறுவனம்தான் சன் பிக்சர்ஸ், அதே போல் உதயநிதி ஸ்டாலின் தயாரித்த முதல் திரைப்படம் கூட விஜய் திரைப்படம்தான்.
இதையும் படிங்க: “வர்மா” படத்தில் எழுந்த பிரச்சனைதான் என்ன?? சீயான் விக்ரமை ஏமாற்றினாரா பாலா??
அன்றைக்கும் விஜய்க்கு அரசியல் ஆசை இருந்தது. நமக்கு ஒரு எதிரி வருகிறாரே என நினைத்து அவர்கள் விஜய்யை வைத்து படம் எடுக்காமலும் இல்லை. விஜய் ஒரு வேளை நமக்கு எதிராக கட்சி தொடங்கி நம்மிடமே கத்தி வீசிவிடுவாரோ என்ற எண்ணம் திமுகவுக்கு இருக்கிறதாம். ஆதலால் விஜய்யை தனது கைக்குள்ளேயே வைத்திருந்தால் நமது கையை விட்டுப் போய்விடமாட்டார் என திமுக முயற்சி செய்து வருவதாக பிஸ்மி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.