பா.ரஞ்சித்துக்கு வரலாறு தெரியுமா? தெரியாதா? தங்கலானை இப்படியா எடுப்பாரு...!
தங்கலான் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்தில் விக்ரமின் நடிப்பு ரொம்பவே வித்தியாசமாக பாராட்டும்படி அமைந்துள்ளது. படத்தைப் பற்றி கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டுள்ளன. இந்தப் படத்தில் உள்ள குறை, நிறைகளைப் பிரபலம் ஒருவர் பட்டியலிட்டுள்ளார். வாங்க பார்க்கலாம்.
தங்கலான் படம் பா.ரஞ்சித் இயக்க விக்ரம் தன் உடலை வருத்தி ரொம்பவே கஷ்டப்பட்டு நடித்துள்ளார். பா.ரஞ்சித்துக்கு சபாஷ் சொல்லலாம். நாம சென்னை, மதுரை, கோவை, நெல்லை பாஷையைப் பற்றிக் கேள்விப்பட்டு இருப்போம். இந்தப் படம் பேசறது வட ஆற்காடு மொழி.
குறிப்பா வேலூர், திருவண்ணாமலை பகுதி மக்களின் வாழ்வியல் தொடர்பான மொழி. அதுல அரைவாசி சென்னை மொழி. அவர் ரொம்ப வித்தியாசமாக கன்டென்டை எடுத்துக்கிட்டு அளவோடு பயன்படுத்தி இருக்காரு. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் பாடல்கள் நல்லாருக்கு.
தமிழ்சினிமாவுல தங்கம் தொடர்பான காட்சிகள் இதுவரைக்கும் பெரிசாக வந்தது இல்லை. கேஜிஎப் பற்றியும் அழகா சொல்லிருக்காரு. விக்ரம் ரொம்ப அழகா நடிச்சிருக்காருங்கறதை விட 1850ல வாழ்ந்த ஒரு வீரமான அதே நேரத்துல ஒடுக்கப்பட்ட இளைஞராக வாழ்ந்துருக்காரு.
படம் முழுக்க 3 கேரக்டர்கள்ல உயிரோட்டமா நடிச்சிருக்காரு. அவருக்கு இணையா பார்வதி நடிச்சிருக்காரு. பசுபதியும் அடையாளமே தெரியாம மிரட்டியிருக்காரு.
படத்தில் சிஜி ஒர்க், ஜமீன்தார் வரும்போது மக்கள் பதற்றமில்லாமல் இருப்பது போன்ற லாஜிக் குறைபாடுகள் உள்ளன. புத்தர் சிலையை எதுக்குக் கொண்டு வந்தோம்னு பா.ரஞ்சித் சொல்லவே இல்லை. 19ம் நூற்றாண்டில் புத்தமதம் தமிழகத்தில் இல்லை. கிட்டத்தட்ட பத்தாம் நூற்றாண்டிலேயே பௌத்தம் இல்லை.
வரலாறு அவருக்குத் தெரியுமான்னு தெரில. பல அமானுஷ்யங்களைக் காட்டுறாங்க. பேயா, சாமியான்னும் தெரியல. இப்படி பல கேள்விகள் எழுகிறது. மற்ற படங்களோடு ஒப்பிடும்போது பா.ரஞ்சித்தோட இந்தப் படம் ரொம்ப சுமார். மேற்கண்ட தகவல்களைப் பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.