இதையாவது செய்யுங்க.! சிவகார்த்திகேயனுக்கு இந்த நிலைமையா.?!

by Manikandan |   ( Updated:2022-02-01 07:10:26  )
sivakarthikeyan
X

இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் தற்போது “அயலான்” படத்தினை சிவகார்த்திகேயனை நாயகனாக வைத்து இயக்குவது அனைவருக்கும் தெரிந்ததே ஆனால் அது மட்டும் இல்லாமல். இப்படத்தினை பிரமாண்ட பட்ஜெட் கொண்டு தயாரிக்கும் இப்படத்தில் வேற்று கிரக வாசி கதைக்களம் என்பதால் கிராபிக்ஸ் பணிகளுக்கே வருடங்கள் தாண்டி வேலை செய்து வருகிறார் ரவிக்குமார்.

ayalaan movie

அட ஆமாங்க...இன்னும் பட பணிகள் முடிந்த பாடில்லை அந்தளவுக்கு காட்சி சரியாக வரவேண்டும் என ஏதிர்பார்ப்புக்களை கொண்டு இப்படத்தின் பணிகள் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. மேலும், இப்படத்தில் பிரமாண்ட ஹாலிவுட் தரத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதால் இந்த படம் வெளியாக இன்னும் ஒரு வருடம் கூட எடுக்கலாம் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்களேன்- மீண்டும் காதல் மன்னனாக விஜய்.! பிப்ரவரி 14 காத்திருக்கும் பெரிய சர்ப்ரைஸ்.!

sivakarthikeyan

இந்நிலையில், சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் நடிகர் என்பதால், ஏற்கனவே 'டான்' படத்தின் ரிலீஸ் தேதி சிவகார்த்திகேயன் பிறந்தநாள் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா காரணமாக மார்ச் 25 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

sivakarthikeyan

இதனால், அயலான் படத்தின் டீசர் ஆவது பிறந்தநாள் அன்று வெளியாகும் என கூறப்படுகிறது. அந்த அளவிற்கு சிவகார்த்திகேயன் மன நிலை வந்துவிட்டதாக பேசப்படுகிறது.

Next Story