இதெல்லாம் நமக்கு தேவைதானா ராஜமௌலி.?! என்ன செய்ய போகிறாரோ?!

by Manikandan |   ( Updated:2022-02-07 07:50:01  )
இதெல்லாம் நமக்கு தேவைதானா ராஜமௌலி.?! என்ன செய்ய போகிறாரோ?!
X

பாகுபலி என்ற பிரமாண்ட படத்தின்மூலம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்கவைத்தவர் இயக்குனர் ராஜமௌலி. இப்படத்தின் வெற்றிக்குப் பின் எப்படியாவது ராஜமௌலியுடன் ஒரு படத்திலாவது இணைந்து பணியாற்ற வேண்டும் என அணைத்து ஹீரோக்களும் தவம் கிடக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் அவர் திரைப்படங்கள் தமிழில் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. தற்போது RRR எனும் பிரமாண்ட படத்தை இயக்கி முடித்துள்ளார். அந்த திரைபடத்தின் ரிலீசுக்காக இந்திய திரையுலகமே காத்திருக்கிறது.

அந்த வகையில், RRR படத்தை முடித்துவிட்டு ராஜமௌலி, தெலுங்கில் மகேஷ் பாபுவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் ஒன்று கசிந்தது. ஆம்...இதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம்.

maheshbabu

மேலும், இப்படத்தில் வில்லனாக நடிக்க சீயான் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது. பொதுவாகவே ராஜமௌலி படங்களில் ஹீரோவை விட வில்லன் ரோலுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும்.

தற்போது, இப்படத்தின் படத்தின் பற்றிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, மகேஷ் பாபுவை வைத்து இயக்க போகும் இப்படம் முழுக்க முழுக்க காட்டு பகுதியில் வைத்து Adventure படமாக எடுக்க போவதாக கூறப்படுகிறது. அதும், நமக்கு புடித்த டார்சன் போன்று மகேஷ் பாபுவை வைத்து எடுக்க உள்ளதாக பேசப்படுகிறது.

ஆனால், இதில் தான் டிவிஸ்டே இருக்கிறது. மகேஷ் பாபு ஆக்சன் மற்றும் காதல் கதைக்கு தான் அம்சமாக இருப்பார். இவரை வைத்து டார்சன் போன்று எடுப்பதற்கு சாத்தியமே இல்லை என்று ஒரு தரப்பு பேசுகிறது. சரி என்ன நடக்க போவதென்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Next Story