Entertainment News
பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மாவிடம் பாரதி சொல்லப்போகும் நிபந்தனை என்ன தெரியுமா…?
பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் முன்னணி தொடர்களில் ஒன்று தான் பாரதிகண்ணம்மா. இந்த தொடரில் பாரதி மற்றும் கண்ணம்மாவுக்கிடையே ஏற்பட்டுள்ள பிரிவு பல வருடங்களாக நீடித்து வருவது போல காண்பிக்கப்படுகிறது.
இந்நிலையில் தற்பொழுது இந்த பிரிவுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப் போவதாகவும் இன்னும் சில தினங்களில் பாரதி தனது மனைவி கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ தொடங்கப் போவதாகவும் காண்பிக்கப்பட்டு வருகிறது. ஆனால் உன்னுடன் சேர்ந்து வாழ வேண்டுமானால் ஒரு நிபந்தனை உண்டு என கண்ணம்மாவிடம் பாரதி கூறுகிறார்.
அது என்னவாக இருக்கும் என்பது குறித்து ரசிகர்கள் இடையே பெரும் குழப்பம் உண்டாகி வரும் நிலையில், கண்ணம்மாவிடம் இருக்கும் குழந்தை லட்சுமி எனக்கு பிறந்த குழந்தை இல்லை என்பதை தான் பாரதி நிபந்தனையாக கூறுவார் என கூறப்படுகிறது.