ஷாலினி வாங்கிய சத்தியம்.. 23 வருடமாக கட்டுப்பட்டு நடக்கும் அஜித்.. அப்படி என்னவா இருக்கும்?..

அஜித் குமார் ஆரம்ப காலத்தில் விளம்பர படங்களில் நடித்து தன் திரைப் பயணத்தை தொடங்கியுள்ளார். பின்னர் 1992 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான "பிரேம புஸ்தகம்" என்ற படத்தில் அறிமுகம் ஆனார். அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த புது முகத்திற்கான விருது கிடைத்தது. பின்னர் அமராவதி என்ற தமிழ் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படம் தோல்வி படமாக அமைந்தது. தோல்வியே வெற்றிக்கு முதல் படி என்ற வாக்கிற்க்கு இணங்க, அடுத்தடுத்து வெளிவந்த திரைப்படங்களில் தன் திறமையை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் நல்லதொரு கதாநாயகனாக வளர்ந்தார்.

AJITH WITH SHALINI

1995இல் மணிரத்னம் தயாரிப்பில் இயக்குனர் வசந்த் இயக்கத்தில் அஜித் நடித்து வெளிவந்த படம் ”ஆசை”. இப்படத்திற்கு தேனிசைத் தென்றல் தேவா இசை அமைத்திருப்பார். பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படம் விமர்சனம் மற்றும் வணிகரீதியாகவும் வெற்றி பெற்றது மேலும் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதையும் பெற்றது‌. அஜித்குமாருக்கு மோட்டார் சைக்கிளின் மீது கொண்ட மோகத்தின் காரணமாக மோட்டார் பந்தங்களில் ஈடுபட்டார். அப்பொழுது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்தார்.

AJITH

திரைப்படங்களில் நடிக்க தடை ஏற்பட்டது. சிறிது இடைவெளிக்கு பிறகு 1998 ஆம் ஆண்டு இயக்குனர் சரண் இயக்கத்தில் ”காதல் மன்னன் ”திரைப்படத்தின் மூலம் மீண்டும் தன் திரை பயணத்தை தொடங்கினார்.பின்னர் 1999 ஆம் ஆண்டு இயக்குனர் சரண் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ”அமர்க்களம்” இப்படத்தில் அஜித் குமாருடன்,ஷாலினி,ரகுவரன்,ராதிகா மற்றும் பல நடித்திருந்தனர். இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் அஜித் மற்றும் ஷாலினி இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து. பின்னர் அடுத்த ஆண்டே கல்யாணமும் செய்து கொண்டனர்.

AJITH WITH SHALINI

அச்சமயத்தில் ஷாலினி அஜித் குமார் இடம் சத்தியம் ஒன்று வாங்கியுள்ளார். அதில் திருமணத்திற்கு பிறகு ”ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க கூடாது என்றும் மாதத்தில் 15 நாட்கள் படப்பிடிப்பிற்காகவும் மீதிநேரம் குடும்பத்துடன் செலவிட வேண்டும்” என்றும் சத்தியம் வாங்கினாராம். திருமணம் ஆகி 23 ஆண்டுகள் ஆகியும் இன்று வரையும் அவர் அந்த சத்தியத்தை கடைபிடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it