அஜித் தொடர்ந்து முன்னணியில் இருக்க இரண்டு காரணங்கள்!. அது என்ன தெரியுமா?..

By Hema
Published On: March 7, 2023
ajithkumar
---Advertisement---

இன்றைய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். கடைசியாக இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் இவர் நடித்து வெளியான ”துணிவு” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றி படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து ”ஏகே 62” என அழைக்கப்படும் பெயரிடப்படாத இவரது அடுத்த படத்தின் வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனை மகிழ் திருமேனி இயக்குகிறார். இன்று டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் அஜித். மற்ற ஹீரோக்களை காட்டிலும் அனைத்து வகைகளிலும் வேறுபட்டு காணப்படுகிறார்.

ajithkumar
ajithkumar

மற்ற நடிகர்களின் காணப்படும் எந்த சாயலும் இவரிடம் காணப்பட இயலாது. அனைத்தையும் தவிர்க்கக்கூடிய ஹீரோவாக உள்ளார். குறிப்பாக படங்களுக்கான விருது வழங்கும் விழாவை தவிர்ப்பது மற்றும் பொது நிகழ்ச்சிகளை தவிர்ப்பது என்று பல வருடங்களாக அனைத்தையும் தவிர்த்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் தனது சொந்தப் படத்தின் பூஜை முதல் ப்ரமோஷன் வரை என அனைத்தயும் தவிர்த்து வருகிறார். மற்ற நடிகர்களை போல் சொத்துக்கள் வாங்கி குவிப்பதிலலும் ஆர்வம் காட்டுவதில்லை. இப்படி வளர்ந்த ஒரு நடிகர் மற்ற நடிகர்களை காட்டிலும் வேறுபட்டு இன்று முன்னணி நடிகராக காணப்படுகிறார் என்றால் அதற்கு இரு காரணங்கள் உண்டு.

ஒன்று அவரின் ரசிகர்களின் ஆதரவு. ஆரம்ப காலங்களில் தமிழ் சினிமாவில் அதிக ஃபிளாப் படங்களை கொடுத்தவர் அஜித். தமிழ் சினிமாவில்”நான் கொடுத்த ஃபிளாப் படங்களை வேறு எந்த நடிகர் கொடுத்திருந்தாலும் இந்நேரத்திற்கு காணாமல் போய் இருப்பார் ”என்று அஜித்தே கூறியிருக்கிறார். அப்படி அவரின் படங்கள் ஓடினாலும் ஓடாவிட்டாலும் ஆரம்ப காலங்களில் அவருக்கு பட வாய்ப்பு இல்லாத போதிலும் அவருக்கு உறுதுணையாக நின்று தொடர்ந்து ஆதரவு அளித்தவர்கள் அவரின் ரசிகர்கள்.

ajithkumar
ajithkumar

ஒரு கட்டத்தில் ரசிகர் மன்றத்தை களைத்த போதிலும் அவரின் ரசிகர் பட்டாளம் இன்னும் அதிகமாக படையெடுக்க செய்தது. இப்படி ரசிகர்கள் ஆதரவு தொடர்ந்து கிடைக்க ஒரு காரணமாக அமைந்தாலும் மற்றொன்று அவரின் தன்னம்பிக்கை. இன்று அவரை புகழின் உச்சிக்கே கொண்டு செல்ல ஒரு காரணமாக உள்ளது. இந்த இரண்டும் சேர்ந்துதான் அஜித்தை தொடர்ந்து முன்னணியில் நிலைத்து நிற்க முக்கிய காரணமாக விளங்குகிறது.