ரஜினி கேட்ட கேள்வியில் ஆடிப்போன பாலச்சந்தர்.. அப்படி என்ன கேட்டார் தெரியுமா?..
இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்குபவர் ரஜினிகாந்த். இவர் பெங்களூரில் கண்டக்டராக வேலை செய்யும் போதே நாடகங்கள் பார்க்க செல்லும் வழக்கம் கொண்டிருந்தார். அதன் காரணமாக நாடகம் நடிக்க தொடங்கினார். உடன் வேலை செய்யும் நண்பர்கள் இவரை ஒரு ஹீரோ போல் சித்தரித்து உற்சாகப்படுத்தினர். இதன் காரணமாக அவருக்கு சினிமா மீது ஆசை ஏற்பட்டது. பின்பு சென்னையில் உள்ள நடிப்பு கல்லூரியில் நடிப்பு கலையை பயின்று பட்டயம் பெற்றார். பின்னர் இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ”அபூர்வ ராகங்கள்” என்னும் திரைப்படத்தில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து 80களில் உச்சபட்ச நடிகர் ஆனார். பின்னர் தன் ரசிகையும் பத்திரிகையாருமான லாதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அன்றைய காலகட்டத்தில் உச்சபட்ச நடிகராக இருந்தவர் கமல். ரசிகர்களின் பெறும் ஆதரவால் அவருக்கு இணையான இடம் ரஜினிக்கு கிடைத்தது. ரஜினி சென்ற இடமெல்லாம் தனி ரசிகர் பட்டாளம் அவரை சூழ்ந்தது. இது அவருக்கு சந்தோஷமும் மறுபுறம் தனிமனித சுதந்திரத்தை அனுபவிக்க முடியாமல் தவித்தார். அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து ஓய்வு இல்லாமல் அதிக படங்களில் நடிததால் மன அழுத்தத்தில் இருந்தார்.
இதன் காரணமாக அவர் ஒரு நாள் அவரது வீட்டின் உள்ள பாலச்ந்தர் போட்டோவை தவிர மற்ற அனைத்து போட்டோக்கள் மற்றும் இதர பொருள்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கியுள்ளார். இதனைக் கண்ட லதா அதிர்ச்சி அடைந்தார். பின்பு இவரை கட்டுப்படுத்த ஒரே வழி இயக்குனர் பாலச்சந்தரை அழைப்பது மட்டுமே என தெரிந்து கொண்டு அவருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வரவழைத்தார். பாலச்சந்தர் அவரது வீட்டிற்கு வந்து இருக்கும் சூழ்நிலையை கண்டு அதிர்ந்து போனார்.
பின்பு சுவற்றில் இருந்து அவருடைய போட்டோவை கண்டு ”இதை மட்டும் ஏன் விட்டு வைத்திருக்கிறாய் அதையும் உடைத்து விடு” என்று சொன்னார். அதற்கு ரஜினி ”சார் நான் எங்கேயோ சிவாஜி ராவ்வாக இருந்தேன் என்னை ஏன் இப்படி பெரிய ஸ்டார் ஆக்குனீங்க” என்று கேட்டார் . இதை கேட்ட பாலச்சந்தர் அதிர்ச்சி அடைந்து போனார். ”எவ்வளவு பேர் இந்த இடத்துக்காக போராடி கொண்டிருக்கிறார்கள் என்று தெரியுமா ..”என்று அவருக்கு பக்குவமாய் கூறினார். இன்று நீ பெரிய ஆளாகி விட்டாய் இதை நீ அனுபவி இதை பக்குவமாய் கையாள பழகிக்கொள் என்று அறிவுரை கூறினார் பாலச்சந்தர்.
இந்த சம்பவம் அந்த கால கட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.