Cinema News
அந்த விஷயத்தில் விஷாலையே வியக்க வைத்த கமல்… என்ன செய்தார்னு தெரியுமா?
உலகநாயகன் கமல் படங்கள் குறித்தும், அவர் 10 வருஷத்திற்கு முன்பு சொன்ன விஷயம் குறித்தும் தற்போது ஒரு பேட்டியில் விஷால் தனது கருத்துகளை இவ்வாறு தெரிவித்துள்ளார்.
திருட்டு சிடிக்கு இப்போ வேலை இல்லை. இன்னைக்கு ஓடிடின்னு ஒரு விஷயம் வந்துருச்சி. அன்னைக்கு 10 வருஷத்துக்கு முன்னாடியெ கமல் சார் சொன்னாரு. அப்போ திட்டுனாங்க. கமல் சார் ஒரு தீர்க்கதரிசி. அவர் எப்பவோ சொன்னாரு. விஸ்வரூபத்துக்கு. அப்போ டைரக்ட் டிடிஎச் வரப்போகுதுன்னாரு. அப்போ அவரை வச்சி செஞ்சிட்டாங்க. ஆனா உண்மையிலே என்ன நடந்தது? இப்போ எங்கே போயி நிக்கிறாங்க..?
இதையும் படிங்க…வேட்டையன் படத்தில் ரஜினியின் புதிய பரிணாமம்… இறங்கி அடிக்கும் த.செ.ஞானவேல்…
அமேசான்லயும், நெட்பிளிக்ஸ்லயும் ஜி5லயும் எல்லா ஓடிடி வாசல்லயும் போயி விக்கிறதுக்கு நிக்கிறாங்க. அவர் ஒரு தீர்க்கதரிசி. குருதிப்புனல் எப்பவோ எடுத்தாரு. இப்ப வந்துச்சுன்னா நெட்பிளிக்ஸ்ல பிச்சிக்கிட்டுப் போகும். அவரோட கலெக்ஷன். மகாநதி, குணா எல்லாம் வரிசையா பார்த்தேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கமல் தனது விஸ்வரூபம் படம் ரிலீஸாக கடும் போராட்டங்களை சந்தித்தார். படம் ரிலீஸாகா விட்டால் நாட்டை விட்டே வெளியேறுவேன் என்றார். அப்போது டைரக்டா டிடிஎச்சில் வெளியிடும் காலம் ஒன்று வரும் என்றார். அவரே வெளியிடப்போவதாகவும் சொன்னார். அப்போது பல விமர்சனங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க…எம்ஜிஆர் – சிவக்குமாருக்கு இடையே இப்படி ஒரு பிரச்சினை இருந்ததா? 100வது பட விழாவில் நடந்த சம்பவம்
சமீபத்தில் தான் கமலின் பல படங்கள் தூசு தட்டப்பட்டு ரசிகர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகின்றன. அப்படித் தான் கமலின் குணா படமும், அன்பே சிவம் படமும், குருதிப்புனல் படமும் தற்போதுள்ள தலைமுறையே வியந்து பார்க்கிறது. மலையாளத்தில் பிரபலமான மஞ்சுமெல் பாய்ஸ் படம் குணா படத்தின் குகையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது தான்.
இன்னும் சொல்லப் போனால் அதில் கமல் பாடிய கண்மணி அன்போடு காதலன் என்ற பாடலை அப்படியே வைத்திருப்பார்கள். ஒரு உண்மையான கலைஞன் என்றால் அவன் காலம் கடந்தும் பேசப்படுவான் என்பதற்கு இப்படமே சாட்சி.